ஆடி மாத ராசி பலன்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு.. ஆடி மாதத்தில் அதிர்ஷம் கிடைக்குமா?

  • ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியான இன்றில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக நிறைய முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய தொழில், புதிய உத்தியோகம், புதிய வியாபாரம் கிடைக்கும். பண விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். புதிய முதலாளிகள் கிடைப்பார்கள். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

    Advertisement

    வியாபாரத்தில் நிறைய யோக பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எல்லா கஷ்டங்களும், சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் வழிபாடு, அம்பாளுக்கு கைங்கரியம் செய்வது, அன்னதானம் செய்வது ஏற்றத்தை தரும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிக ராசியினர் சோம்பலைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். துணையிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    அக்கம்பக்கத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்களின்போது புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனம் தேவை. வங்கிகளுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், விலை உயர்ந்த பொருள்களை கையாள்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நன்மை கிடைக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மகாலட்சுமிக்கு தாமரை கொடுப்பது நன்மையைத் தரும். தாய் தந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றிக் கொள்ளும் யோகம் உண்டு. நிறைய சுப விரயங்கள், பாக்கியங்கள் ஏற்படும்.

    Advertisement

    அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியாக ஆனந்தம் ஏற்படும். உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். விடுபட்ட அம்பாள் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கடல் கடந்து தொலைதூரத்திற்கு விமானத்தில் சென்றாவது தெய்வ வழிபாடுகளை செய்து வருவீர்கள்.

    பண வரவு நன்றாக இருக்கும். கடன் அமைப்புகள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு, பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Aadi Month 2026 brings career success, financial growth, foreign opportunities and key life changes for Kadagam, simmam and kanni zodiac signs along with a few cautions.