ஏழரை சனியை விடுங்க.. கும்ப ராசிக்கு ஆடி மாதத்தில் நடக்க போகும் அதிசயம்

  • ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கும்ப ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    கும்பம்

    கும்ப ராசி, கும்ப லக்னத்திற்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் உண்டு. உத்யோகத்தில் தடைபட்ட பலன்கள் படிப்படியாக கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். ஆச்சர்யத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான காலம். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் தைரியமாக இறங்கலாம். தெளிவாக திட்டமிட்டு செய்தால் 100 சதவிகிதம் வெற்றி உண்டு.

    Advertisement

    தொழில் லாபம்

    தொழில் இருந்த தடைகள் முற்றிலும் விலகும். தொழில் விருத்தி உண்டாகும். கூட்டு தொழிலில் இருந்து சுயமாக தொழில் தொடங்குவீர்கள். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் ஏற்படும். புதிதாக வீடு கட்டுவது, நிலம் வாங்குவது என்று அசையும், அசையா சொத்து சேர்க்கை நிச்சயம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அணுகூலம் ஏற்படும். ரியல்எஸ்டேட் துறையில் இருப்போருக்கு இது ஜாக்பாட் காலம்.

    பிரச்சனைகள்

    எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சமாளிப்பது நல்லது. மூன்றாவது ஆட்களை நம்பி எஎந்த பிரச்சனையிலும் இறங்க வேண்டாம். உங்கள் விஷயத்தில், பிரச்சனைகளில் பிறர் தலையிடுவதை தவிர்க்க பாருங்கள். பெற்றோர், வாழ்க்கை துணை, உறவினர் என யார் சொன்னாலும் எந்த பிரச்சைனையிலும் தலையிட வேண்டாம். சோம்பேறித்தனம் இல்லாத கும்ப ராசியினருக்கு இது அற்புதமான காலம். நிதானத்தை விட்டுவிட வேண்டாம்.

    Advertisement

    பரிகாரம்

    ஏழரை சனி நடந்து வருவதை மறக்க வேண்டாம். கூடா நட்பு கேடாக முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். வாகனத்தில் கவனமாக இருங்கள். அதிவேகமாக இயக்குவது, விதிகளை மீறி இயக்குவது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செல்போனில் பேசிவிட்டு வாகனத்தை இயக்குவது, பிற வேலைகளில் ஈடுபடுவது போன்வற்றை தவிர்க்கவும். தேவி வழிபாடு நற்பலன்களை கொடுக்கும்.

    English Summary

    Aadi Month starting from July 17th to August 16th. Kumbam (Aquarius) Will get excellent benefits of this month.