ராகுவால் திடீர் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. இந்த 3 விஷயத்தால் வாழ்க்கையே மாறப்போகுது

  • ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்களை விரிவாக காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மிதுன ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    Advertisement

    மிதுனம்

    மிதுன ராசி மற்றும் லக்னத்திற்கு எதிரிகளை வெல்லும் யோகம் உண்டாகும். வழக்குகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். விரயங்கள் அனைத்தும் குறையும். பண வரவு நன்றாக இருக்கும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும்.

    கவனம்

    வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் வேகமாக செல்வது, போதைப் பொருள்களை பயன்படுத்துவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சனி வக்கிரமாக இருப்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணம் வந்து சேரும்.

    Advertisement

    அனுகூலம்

    வீடு, நிலம், கனிமங்கள் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு ஜாக்பாட் உண்டாகும். திடீர் பயணங்கள் அனுகூலத்தைத் தரும். தொடர்ச்சியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் யோகம் உண்டாகும். சூரியன், புதன் சேர்க்கை இருப்பதால் வாக்கு ஸ்தானம், வாக்குகள் தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

    சிக்கல் தீரும்

    மிதுன ராசி பெற்றோர் குழந்தைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கிரெடிட் கார்டு பிரச்சனை, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை, கோர்ட் பிரச்சனை போன்றவை சரியாகும். எதிரியாக இருந்தவர்கள் உங்களிடம் இணக்கமாக மாறுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும் நல்ல காலகட்டம்.

    Advertisement

    ஜாக்பாட்

    ராகு 10 ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் ஜாக்பாட் உண்டாகும். பண வரவுக்கு உண்டான உத்திரவாதங்கள் கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நிறைய ஆதாயங்கள் கிடைக்கும். கடல் கடந்து பயணங்கள் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை, மயக்கம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. சிவன் வழிபாடு செய்வது, தினந்தோறும் சிவ மந்திரங்களை சொல்லி வருவது ஏற்றத்தைத் தரும். இந்திராட்சி கவசத்தை படிப்பது யோகத்தையும், ஜெயத்தையும் ஏற்படுத்தும்.

    English Summary

    Aadi month rasi plan: Aadi Month starting from July 17th to August 16th. Mithunam (மிதுன ராசி பலன்) Will get excellent benefits of this month.