ஆனி மாத ராசி பலன் 2026: ஆனி மாதத்தில் உருவாகும் சக்திவாய்ந்த புதாதித்ய யோகம் மற்றும் பத்ர ராஜயோகம் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சத்தை எட்டவுள்ளது. குறிப்பாக தொழில், பணவரவு, பதவி உயர்வு, குடும்ப முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5 ராசியினருக்கு புதிய வாய்ப்புகளும், சுப பலன்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆனி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் ஜூன் 16ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதத்தில் உருவாகும் முக்கிய கிரக சேர்க்கைகள் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்க உள்ளன. குறிப்பாக மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. அதேசமயம், புதன் தனது சொந்த ராசியில் வலிமை பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகம் உருவாகிறது.
இந்த அரிய கிரக அமைப்பு காரணமாக மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில், பொருளாதாரம், குடும்பம் மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த பல நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்ட பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஆனி மாதத்தில் சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசியிலேயே இணைவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும் சூழல் உருவாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வருமானத்தை உயர்த்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து உதய சூரியனை வழிபடுங்கள். இந்த ஆனி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபங்களை அதிகரிக்கும் காலமாக அமையும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு பல நன்மைகளைத் தரும். சமூக மரியாதை உயரும். காயத்ரி மந்திரம் ஜெபிப்பது நன்மை தரும். கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிட வளர்ச்சிக்கான முக்கியமான மாதமாக இருக்கும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் அரசு சார்ந்த அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரக்கூடிய காலமாக இது அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் தான தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தான பலம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தடை நீங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்ப ஆதரவும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நிதிநிலை மேம்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆனி மாதம் உறவுகள் மற்றும் கூட்டுத் தொழில்களில் நல்ல பலன்களை வழங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இஷ்ட தெய்வம், குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களைத் தரும். ஆனி மாதத்தில் உருவாகும் பத்ர ராஜயோகம் மற்றும் புதாதித்ய யோகம் காரணமாக மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் அதிர்ஷ்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கிடைக்கும். சரியான முயற்சிகளையும், பரிகாரங்களையும் மேற்கொண்டால் இந்த காலத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.மிதுனம்
சிம்மம்
கன்னி
துலாம்
தனுசு