ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம்


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை தனுசுக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு

    தனுசு ராசியினருக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் அமைப்பு உள்ளது. மனைவியால் பாக்கியம், கணவரால் சந்தோஷம் கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. இதுவரைக்கும் மாமியார், மாமனாரிடம் நல்ல பெயர் எடுக்காதவர்கள் கூட இப்போது நற்பெயர் எடுக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நல்ல மாற்றங்கள் இருக்கும் அமைப்பு ஏற்படும். கணவர் மனைவியை மதிக்கக்கூடிய தன்மை ஏற்படும்.

    வருமானம் பெருகும்

    7 ஆம் இடத்தில் இருக்கும் சூரியன் பாக்கியாதிபதி என்பதால் எதிர்பாலினத்தவரால் வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 5 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் 6 ஆம் இடத்திற்கு மாறுகிறார். அது நல்ல மாற்றமாக இருக்கும். பணம் சார்ந்து இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள், பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கடனை அடைக்கும் அளவுக்கு வருமானம் ஏற்படும்.

    Advertisement

    குரு சுக்கிரன்

    எதிரிகள் உங்கள் பக்கம் வருவதற்கு அச்சப்படுவார்கள். பூமி சார்ந்த தொழில்கள், கட்டுமானத் தொழில்கள், மருத்துவத் துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். 8 ஆம் இடத்தில் குருவும், சுக்கிரனும் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை, நன்மையைக் கொடுக்கும். ஊர் விட்டு ஊர் செல்லக்கூடிய அமைப்புகள் ஏற்படும்.

    வெளிநாடு யோகம்

    வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய ஆசைகள் வரும். அங்கு சென்று வேலை பார்க்கும் என்கிற எண்ணம் ஏற்படும். மேற்கு நாடுகள், ஐரோப்பியா, அமெரிக்கா, அரசு நாடுகளுக்குச் செல்ல வேண்டும், அங்கு சென்று வேலை செய்ய விரும்புவோருக்கு மிகப்பெரிய நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். ராசிநாதன் உச்சமடைந்து 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணப் பற்றாக்குறை தீரும்.

    Advertisement

    முன்னேற்றம்

    வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தோடு நல்ல இணக்கம் ஏற்படும். சம்பள உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் நிறைவு ஏற்படும். கெளரவம், மதிப்பு, மரியாதை, புகழ் கிடைக்கும் நல்ல காலகட்டம். எந்த இடங்களில் எல்லாம் மரியாதை குறைந்தது என்று நினைத்தீர்களோ அந்த இடங்களில் எல்லாம் மதிப்பு, மரியாதை திரும்பி வரும் மாதமாக அமையும்.

    English Summary

    Dhanusu Rasi Palan: Dhanusu (Sagittarius) natives may experience powerful Rajayoga effects during the Aani month. Career growth, financial gains, family happiness, and new opportunities are likely due to favorable planetary alignments.