ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம்


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை மகரத்திற்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மகரம்

    மகர ராசியினருக்கு இந்த மாதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல காலம் தொடங்கிவிட்டது. ராசியையும், ராசிநாதனையும் குரு பார்ப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். ராசிநாதன் சனியை, ராசியை உச்சகுரு பார்க்கிறார். சுக்கிரனும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் நிறைய சந்தோஷங்கள் உண்டாகும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

    பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி

    காதல் சார்ந்த விஷயங்கள், கூட்டாளிகள், கணவன், மனைவி, பங்காளிகள் சார்ந்த விஷயங்கள் என எல்லா விஷயங்களிலும் பெரிய நன்மைகள் ஏற்படும். கஷ்டப்பட்டதற்கெல்லாம் பெரிய பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளுக்கு மற்றவர்கள் பெயர் எடுத்துச் செல்வார்கள். தொழிலில் போட்டி, வியாபாரத்தில் மந்த தன்மை, உதவியாளர்கள் இல்லாதது, குடும்பம் சரியில்லை, நிம்மதியில்லை என்று பல மனக் கவலைகள் இருந்திருக்கும். இந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும்.

    Advertisement

    தொட்டது துலங்கும்

    சொந்த ஊர் சார்ந்த விஷயங்கள் அற்புதமாக இருக்கும். தொட்டது துலங்கும். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அவை நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. கடந்த 5, 6 ஆண்டுகளாக செய்த கெட்ட விஷயங்களை விலக்கி வைத்துவிடுவது நல்லது. உங்களுடைய புத்தி, அறிவு, ஞானத்தை சரியாகப் பயன்படுத்தி கடந்த காலத்தில் இழந்தவற்றை திரும்பப் பெறும் அமைப்பு ஏற்படும்.

    முயற்சிகளில் வெற்றி

    5 ஆம் அதிபதி 7 ஆம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மருத்துவம் பழிக்கும். வயதானவர்களுக்கு நோய், கடனில்லாத வாழ்க்கை அமையக்கூடும். ஆறு மாதங்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களும், மாற்றங்களும் காணப்படும். உங்களுக்குத் தேவையான விஷயங்களில் முழு முயற்சியைப் போட்டால் கண்டிப்பாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    அனுகூலம்

    கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சினிமா துறை, சோஷியல் மீடியாவில் இருப்பவர்கள் பிரபலமடைவது, அரசியல்வாதிகளாகும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். நிறைய நல்ல பலன்களைத் தரக்கூடிய மாதமாக இந்த ஆனி மாதம் உங்களுக்கு அமையும்.

    English Summary

    Magaram Rasi Palan: Magaram (Capricorn) natives may experience powerful Rajayoga effects during the Aani month. Career growth, financial gains, family happiness, and new opportunities are likely due to favorable planetary alignments.