ஆனி மாத பலன்: ராஜயோகத்தைப் பெறும் மேஷம் ராசி.. இந்த மாதத்தை தவற விட்டுடாதீங்க


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் கடக வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் கடகத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம்

    மேஷம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் அட்டகாசமாக இருக்கும். தனகாரனாகிய குரு, தானாதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் உள்ளதால் மேஷ ராசியினருக்கு அற்புதமான ராஜயோகத்தைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது யோகமான அமைப்பாகும். ராகு பகவான் 11 ஆம் இடத்தில் லாபத்தை வாரி வழங்கும் இடத்தில் அமர்ந்திருக்கிறார். 12 ஆம் இடத்தில் இருக்கும் சனியை குரு பகவான் 9 ஆம் பார்வையாக பார்ப்பதால் வேலைக்கான உத்தரவாதம் கிடைக்கும்.

    தடைகள் விலகும்

    நல்ல கிரக அமைப்புகள் உள்ளதால் நன்மைகள் நிறைய ஏற்படும். இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிகள் தடம் தெரியாமல் அழிந்து போகும் சூழல் ஏற்படும். 9 கிரகங்களும் உங்களுக்கு சாதமாக இருக்கிறது. கம்யூனிகேஷனில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நிறைய கண் திருஷ்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

    Advertisement

    நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கும். எதிர்பார்க்காத விஷயங்கள் நடைபெறும். குருமார்களின் சந்திப்பு உண்டாகும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளக் கூடிய அமைப்பு உள்ளது. எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. செல்போன், லாப்டாப், கேமரா, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

    சுபவிரயங்கள்

    உங்களுக்கான தேவைகளுக்காக செலவு செய்வீர்கள். விரயசனி நடந்து கொண்டிருப்பதால் நிறைய சுப விரயங்களைச் செய்வீர்கள். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம் என நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். இடம் வாங்கும் யோகம் உண்டு. குரு உங்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்யவுள்ளார். பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு, காளி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    நீண்டநாட்களாக இருந்து வந்த கோர்ட், கேஸ், வம்பு வழக்குகள் தீரும். புதிதாக ஒரு தொழில், படிப்பை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. புதிய அத்தியாயம் தொடங்கும் யோகம் உண்டு. நல்ல ராஜயோகங்கள் வருவதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. மன அழுத்தம், எரிச்சல், கோபம் போன்ற நிலைமைகள் எல்லாம் மாறும்.

    பேச்சில் கவனம்

    2 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் வார்த்தைகளில் கோபம் தெறிக்கும் என்பதால் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். புரோமோஷன், சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய யோக காலகட்டம். வியாபாரம் செய்வோருக்கு தொழிலை விரிவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பேச்சால் பிழைப்பு செய்பவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    குரு பார்வை

    புதிய சேமிப்புகளைத் தொடங்குவீர்கள். 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் காப்பீடுக்காக முதலீடு செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமூகத்தில் மரியாதை, கெளரவம் அதிகரிக்கும். காதல் இனிக்கும் காலகட்டம். காதலுக்கு வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்கும். இந்த ஆனி மாதம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய காலகட்டமாக இருப்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    English Summary

    Mesham (Aries) natives are likely to experience a powerful Rajayoga during the Aani month, bringing career growth, financial gains, property opportunities, and personal success. Positive planetary alignments may help remove obstacles, improve relationships, and open doors to new beginnings.