ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்!


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் கடக வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் கடகத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம்

    மிதுன ராசியினருக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குழப்பமான நிலைகள் மாறும். வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். முதலீடுகள் செய்து அதன் மூலம் வருமானம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

    யோகம்

    நிறைய பேர் தொழில் முனைவோராவது, இ காமர்ஸ் செய்யலாமா என்கிற எண்ணம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். 25 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய படிப்புகளை படிக்கக்கூடிய யோகம் உண்டாகும். விளையாட்டுகளில் சேரக்கூடிய அமைப்புள்ளது. ஆரோக்கியம், உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    Advertisement

    பேச்சில் கவனம்

    டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் மற்றவர்களை அதிகமாக வேலை வாங்குவீர்கள். நான் சொல்வது தான் சரியென்று நடப்பீர்கள். அதனைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சு, செயலில் கவனம் தேவை. நிறைய நல்லவை தேடி வரும் நல்ல காலகட்டம். இருக்கிற வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வேறு வேலை கிடைத்தால் மட்டும் இருக்கும் வேலையை விடுவது நன்மை பயக்கும்.

    தடைகள் நீங்கும்

    ஆத்ம ஞானம் பெறக்கூடிய நல்ல காலகட்டம். வாராஹி வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும். குடும்பத்திற்கு நிறைய நல்லவைகள் நடக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மாமனார், மாமியார் மூலமாக நிறைய நன்மைகள் நடக்கும். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    Advertisement

    தொழில் மற்றும் வேலை

    பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும். தகவல் தொழில்நுட்பம், கல்வி, விற்பனை, ஊடகம் மற்றும் வணிகத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.

    பணவரவு

    வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரலாம். முதலீடுகள் மற்றும் சேமிப்புகளில் கவனம் செலுத்தினால் எதிர்கால நிதி நிலை மேலும் வலுவடையும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

    English Summary

    Mithunam (Gemini) natives may experience strong Rajayoga effects during the Aani month. Career growth, financial improvement, relationship harmony, and new opportunities are likely due to favorable planetary alignments.