ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம்


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் கடக வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் கடகத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம்

    ரிஷப ராசியினருக்கு இந்த ஆனி மாதத்தில் ராசிநாதன் குருவோடு இணைந்து 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். பணம் சார்ந்த தடைகள் நிவர்த்தியாகும். புதிய புரோஜெக்ட்கள் உங்களைத் தேடி வரும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். சனியின் நிலை அற்புதமாக இருக்கிறது. சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பண வரவு அற்புதமாக இருக்கும்.

    குரு பார்வை

    குரு பார்வை பாக்கியத்தைப் பார்ப்பதால் நன்மைகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு உங்களுடைய தகுதி மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். உங்களை நீங்கள் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை ராசிநாதனும், குருவும் சேர்ந்து கொடுக்கப் போகின்றனர்.

    Advertisement

    பிரச்சனை தீரும்

    ராசிநாதன் அமர்ந்து பாக்கியத்திற்கு பார்வை கொடுப்பதால் அப்பாவின் சொத்துகள் உங்களுக்கு வந்து சேரும். அப்பாவின் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அப்பாவினால் உதவிகள் வரக்கூடிய நல்ல காலகட்டம். தந்தையாகும் யோகம் உங்களுக்கு உண்டாகும். உங்கள் திறமைகள் வெளிப்படும் காலகட்டம். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தவிக்கும் ரிஷப ராசி கலைத் துறையினருக்கு வெற்றிமேல் வெற்றிகள் உண்டாகும்.

    கோபம் அதிகரிக்கும்

    குரு பார்வை 11 ஆம் இடத்தைப் பார்ப்பது, அங்கு சனி பகவான் சுபத்துவமாகி அமைந்திருப்பது வேலையில் பெரிய லாபத்தைக் கொடுக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் கிரக சூழல் உள்ளது. 300 ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய அற்புதமான காலகட்டம். 20 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் ராசிக்குள் அமருவதால் கோபம் அதிகமாக இருக்கும். வேலைகள் வேகமாக நடக்க வேண்டிய, முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த தன்மை உங்களுடன் வேலை செய்பவர்களுக்கு மன வருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    பண வரவு

    உங்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். பண ரீதியாக இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். கேதுவோடு ராசிநாதன் சேர்ந்திருப்பதால் நிறைய நல்லவை நடக்கும். ஜூலை பாதி மாதம் வரை நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தது போலவே நடக்கும். அப்பாவின் மூலமாக உதவிகள், ஆதாயம் கிடைக்கும். நல்ல குருமார்கள் கிடைப்பார்கள். வேலையில் சந்தோஷம், திருப்தி ஏற்படும். பொருளாதாரம் ஏற்றம் உண்டாகும்.

    பயணம்

    நிறைய பணயங்கள் மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். சுயம் இயங்கும் காலகட்டமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். கூடுதல் வருமானத்துக்கு சில வழிகளை மேற்கொள்வீர்கள். ஐடி, உணவுத் துறை, ரியல் எஸ்டேட், கலைத் துறையினருக்கு அமோகமாக வெற்றிகளும், நல்ல மாற்றங்களும் ஏற்படும்.

    Advertisement

    சனியின் அருள்

    சனியுடைய நிலை நன்றாக இருப்பதால் வேறு மாநிலம், வேறு இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் நிறைய புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் இன்டீரியர் வேலைகளைச் செய்வீர்கள். சோபா, கட்டில் போன்றவற்றை மாற்றுவீர்கள். சொந்த பந்தங்களுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Rishabam (Taurus) natives are likely to experience a powerful Rajayoga during the Aani month, bringing career growth, financial gains, property opportunities, and personal success. Positive planetary alignments may help remove obstacles, improve relationships, and open doors to new beginnings.