பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும்


  • ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.

    Advertisement

    ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம்

    சிம்ம ராசியினருக்கு 11 ஆம் இடத்தில் இருந்த குரு 12 ஆம் இடத்திற்குச் சென்றிருக்கிறார். முதல் 15 நாட்களுக்கு இந்த ஆனி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டாம். வேலையில் நிறைய பிரச்சனைகள், பளு அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எந்த விஷயத்துக்கு எல்லாம் வருத்தப்பட்டீர்களோ, கவலைப்பட்டீர்களோ அந்த நிலைமைகள் எல்லாம் மாறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

    யோகம்

    வாழ்க்கையை புதிதாக தொடங்கும் காலகட்டமாக இருக்கும். ராசிநாதன் புதன் வீட்டில் அமர்ந்திருப்பதால் யோகத்தைக் கொடுக்கும். நிறைய நல்லவை நடக்கக்கூடிய காலகட்டம். அஷ்டமசனியில் கடும் அவதியடைந்து வந்த நிலை குரு பார்வையால் இனி மாறும். யாருமே முடிக்க முடியாத விஷயத்தை முடித்துக் காட்டுவீர்கள். திட்டமிட்டு வெற்றி பெறும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    பேச்சில் தெளிவு

    இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு பேச்சில் தெளிவு, நிதானம் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் குரு இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். இனி வேண்டாம் என்ற விஷயத்திற்கு எல்லாம் சரியென்று சொல்வீர்கள். 12 ஆம் இடத்தில் 3 கிரக சஞ்சாரம் செய்வதால் சுய தேடலைக் கொடுக்கும். பெண் தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.

    எப்படி வேலை வாங்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்று வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த நீங்கள் மற்றவர்களிடம் எப்படி பேசினால் வேலை நடக்கும் என்பதை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் எங்கு, எப்படி பேச வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும். கோபத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்தவர்கள் இனி தெளிவாக நடந்து கொள்வீர்கள்.

    Advertisement

    பத்ர ராஜயோகம்

    புத்திசாலித்தனமாக எதிரிகளை கையாளுவீர்கள். புதனோடு வீட்டில் சூரியன் அமர்ந்து புதாதித்ய யோகத்தோடு அமைந்தாலும் 320 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பத்ர ராஜயோகம் உங்களுக்கு இயங்கப் போகிறது. சிம்ம ராசி, சிம்ம லக்கினம் சேர்ந்தவர்களுக்கு பெண் தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். 21 ஆம் தேதி வரை தூக்கத்தில் தொந்தரவுகள், தூக்கமின்மை வருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    தன்னம்பிக்கை

    மொத்தத்தில் இந்த ஆனி மாதத்தில் வேலையில் இருந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். இதுவரைக்கும் இல்லாத அளவு திட்டமிடுதல், தெளிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். மற்றவர்களை எப்படி அணுக வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும். உலகம் உங்களை கொண்டாடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Simmam (Leo) natives may experience powerful Rajayoga effects during the Aani month. Career growth, financial gains, family happiness, and new opportunities are likely due to favorable planetary alignments.