ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.
ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசியினருக்கு அற்புதமான மாதமாக இந்த ஆனி மாதம் அமையும். பதவி மாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். குருவுடன், ராசிநாதன் அமர்ந்திருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் சனி அமர்ந்திருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். 2 ஆம் இடத்திற்கு குருவின் 5 ஆம் பார்வையாக இருப்பதால் அபரிமிதமான பொருள் சேர்க்கை உண்டாகும். 4, 6 ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் வேலை பிரச்சனை என்று சொல்பவர்களுக்கு பதவி உயர்வு இந்த மாதம் கண்டிப்பாக கிடைக்கும். கடன், வழக்கு, நோய், எதிர்ப்பு, பகைக்கான இடமான 6 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் எதிரிகள் அழிவார்கள். கடனால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் பணம் வரும். அந்தப் பணியின் மூலமாக அடமானம் வைத்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். நிறைய பேருக்கு நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். இன்னொரு வேலை கிடைத்தால் மட்டும் இருக்கின்ற வேலையை விடுவது நல்லது. இல்லையெனில் மூன்று மாதத்துக்குப் பிறகு புதிய வேலைக்கு முயற்சிப்பது நல்லது. 3 மாதம் பொறுமையாக இருந்தால் போதும் பின்னர் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். துலாம் ராசி பெண்களுக்கு ஆளுமை அதிகரிக்கும். சொந்த தொழில் தொங்குவதற்கான யோகம் உண்டாகும். நிறைய பேர் இ-காமர்ஸ் தொழில் தொடங்குவார்கள். ராசிநாதன் அமர்ந்திருக்கும் அமைப்பு நன்றாக இருப்பதால் பெரிய பலம் கிடைக்கும். எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடிவயிறு, கழிவுப் பாதைகளில் அக்கறையுடன் இருக்க வேண்டும். குழம்பிக் கொண்டிருந்தே அமைப்புகள் மாணவர்களுக்கு மாறும். வெற்றி வாகை சூடக்கூடிய மாதமாக இருக்கும். சிந்தனை நன்றாக இருக்கும். நிறைய புதிய ஆடைகள், பரிசுகள் கிடைக்கும் யோகம் உண்டு. வருமானத்தில் இருந்த தொய்வு நிலை மாறும். குடும்பத்தில் சுபச் செலவுகள் வந்தால் சேரும். வருமானம் பெறக்கூடிய காலகட்டம். வேலைக்கே செல்ல மாட்டேன் என்று கூறியவர்கள் கூட வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும். இதுவரைக்கும் உங்கள் பேச்சை கேட்காதவர்கள் பேச்சை கேட்பார்கள். முருகனின் அருள் உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். நல்ல குருமார்கள் அமைவார்கள். பொறுப்பு, ஒழுக்கத்துடன் கூடிய படிப்பு நிச்சயமாக கிடைக்கும். திருமணத்திற்கான அமைப்பு உங்கள் குடும்பத்தில் ஏற்படும்.துலாம்
குரு பார்வை
3 மாதம் பொறுங்க..
சுபச்செலவு