காசு மேலே காசு வந்து.. கடக ராசிக்கு கை நிறைய பணம் வரும் நேரம்.. சிக்கல் தீரப்போகுது


  • ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் கடக ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

    Advertisement

    இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கடக ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    கடகம்

    கடக ராசியினருக்கு பெற்றோர்களுக்கு பெரிய நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் பார்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாருக்காகவும் வாக்கு கொடுக்காமல் இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஜாமீன் கொடுப்பது, கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    பணவரவு

    நிறைய பணங்கள் வந்து சேரும். யாருக்காகவும் யோசிக்காமல் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணத்தை தள்ளிப் போடாமல் பேசி முடிவு செய்து கொள்வது நல்லது. எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். முன்னேற்றமும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    சிக்கல் தீரும்

    இதுவரை இருந்து வந்த மன பாரங்கள் எல்லாம் தீரும். புதன்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு தானமாக உணவளிப்பது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் ரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். புதிய விஷயங்களை செய்வீர்கள். ஜென்மத்தில் குரு இருப்பதால் இடமாற்றம்

    Advertisement

    வழிபாடு

    காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி, அலர்ஜி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதையில் ஏதாவதொரு பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் பார்த்துக் கொள்வது நல்லது. கோளார் பதிகத்தை கேட்டுக் கொண்டே இருப்பது நன்மை பயக்கும். ராகு கேது இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Kadagam natives can expect notable developments in career, finances, family life, and personal growth during the Aani month. Let's take a detailed look at the opportunities, challenges to watch out for, and the recommended remedies for this period.