ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் கன்னி ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.
இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கன்னி ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு ஓராண்டுக்குப் பிறகு உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கியிருக்கிறது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். புதிய கணக்குகளைத் தொடங்குவீர்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பிடிவாதம் கொள்ளாமல் எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வது. வெளியிடம், குடும்பம், பிள்ளைகளிடம் கொஞ்சம் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது ஏற்றத்தைத் தரும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். எல்லா விஷயங்களிலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். யோசிக்காமல் புதிய தொழிலைத் தொடங்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சூரியன், 10 ஆம் அதிபதி 10 இல் இருப்பதால் யோசித்துக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டு முயற்சி செய்வது நன்மை. கெளரவம் ஏற்படும் காலகட்டம். நல்ல உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பகைவர்கள் கூட நண்பர்களாகக் கூடிய யோகம் ஏற்படும். நிறைய நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டம். இந்த ஆனி மாதத்தைப் பயன்படுத்திக் கொண்டால் பெரிய நன்மைகள் ஏற்படும். பண விரயமாகும் இருப்பினும் அவை நல்லவைகளுக்காக ஏற்படும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. அலர்ஜி, கேல்சியம், விட்டமின் டி குறைபாடு, ஹார்மோன் குறைபாடு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கோவிந்த நாமத்தை தினந்தோறும் உச்சரிப்பது ஏற்றத்தைத் தரும்.கன்னி
முன்னேற்றம்
சிக்கல் தீரும்
அனுகூலம்
வழிபாடு