ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் ரிஷப ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.
இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ரிஷப ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ரிஷப ராசியினர் பேச்சில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் என எந்த விஷயங்களிலும் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். எல்லா விஷயங்களும் கைகூடி வரும். சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் பற்றி பேசலாம். நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. சூரியனும், புதனும் இருப்பதால் வாக்கு ஸ்தானத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திட்டுவது, சத்தம் போடுவது, சண்டை போடுவது, வாக்குவாதம் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பெரிய அளவுக்கு பணவரவு இருக்கும். 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே நிறைய தோல்விகளைப் பார்த்த உங்களுக்கு இனி வெற்றி பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய நல்ல காலகட்டம். நல்ல உறவுகள் எது, கெடுதல் செய்யக்கூடியவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளும் காலகட்டமாக இருக்கும். இழந்ததை எண்ணி வருத்தப்படத் தேவையில்லை, பலமடங்கு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பம் அமையும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களது பேச்சுத்திறன் மற்றும் செயல்பாடுகள் மூலம் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும், செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல்நலனில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வதும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் கூடுதல் நற்பலன்களைத் தரும். பெற்றோருடன் இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். ரத்தத்தில் பரவக்கூடிய நோய்கள், ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. துர்க்கை வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.ரிஷபம்
பேச்சில் கவனம்
வருமானம்
பணவரவு
பதவி உயர்வு
வழிபாடு