சிம்ம ராசிக்கு ஆனி மாதத்தில் பிரகாசமான மாற்றம்.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்


  • ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் சிம்ம ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

    Advertisement

    இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சிம்ம ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியினருக்கு சூரியன் பகை வீடான 11 ஆம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிறைய நன்மைகளும் நடக்கும். முதலீடு, பணம், காதல் அமைப்பு, கணவன், மனைவி அமைப்பில் இருந்த பிரச்சனைகள் மாறும். கஷ்டங்கள் தீரும் காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கெளரவம் ஏற்படும். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

    Advertisement

    பேச்சில் கவனம்

    வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காதல் அமைப்பு, கணவன், மனைவி விஷயம், உறவுகள் தொடர்பான விஷயங்களில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெற்றோர், பெரியோர் மிகப்பெரிய நல்ல நிலைமைக்கு வருவார்கள். அவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற யோகங்கள் உண்டு. அதனால், இளவயதானவர்களுக்கு பெருமை கெளரவம் ஏற்படும்.

    வாகன யோகம்

    36 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சுப காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வெளியிடத்தில் இருந்து வந்த தகராறு தீரும். வாகன அமைப்பில் அனுகூலம் ஏற்படும். புதிதாக வண்டி ஓட்டி கற்றுக் கொள்வது, புதிதாக வாகனம் வாங்குவது, லைசென்ஸ் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். யோகங்கள் அதிகளவில் இருக்கும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    தொழில் மற்றும் வேலை

    வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதுடன், வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

    பணவரவு

    இந்த மாதத்தில் பணவரவு சீராக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்கால நிதி நிலை மேலும் வலுவடையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம பரிபூரணமாக நீங்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பில் ஏற்றம் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் காணப்படும். உறவுகளில் இருந்து வந்த சிக்கல்களை தீர்த்துக் கொள்வது நல்லது. 36 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விநாயகர், முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Simmam natives can expect notable developments in career, finances, family life, and personal growth during the Aani month. Let's take a detailed look at the opportunities, challenges to watch out for, and the recommended remedies for this period.