குருவின் அருளால் துலாம் ராசிக்கு யோகம்.. 8 இல் செவ்வாய் மிகுந்த கவனம்.. ஆனி மாத முழு பலன்கள்


  • ஆனி மாத ராசி பலன் 2026: ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த ஆனி மாதத்தில் துலாம் ராசியினருக்கான அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன. மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. மேலும், புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பத்ர ராஜயோகமும் அமைகிறது.

    Advertisement

    இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், துலாம் ராசியினருக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஆனி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கவுள்ள பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    துலாம்

    துலாம் ராசியினருக்கு பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். 6, 4, 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நிறைய நன்மைகள் ஏற்படும். 8 இல் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    கெளரவம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்கள் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. ஆகாய மார்க்க பயணம், கடல்மார்க்க பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். முதலீடுகள் கிடைக்கும். துணைக்கு அனுகூலம், கெளரவம் ஏற்படும்.

    மாற்றம்

    குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் துணை உங்களிடம் மீண்டும் வந்து சேருவார்கள். உங்கள் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் ஏற்படும் நல்ல காலகட்டம். தொழிலில், வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    பணவரவு

    தொழில் மற்றும் பணவரவு தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வருமான உயர்வு காணப்படலாம்.

    செலவுகளில் கவனம்

    நண்பர்கள் மற்றும் முக்கிய நபர்களின் உதவியால் சில முக்கிய காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தேவையற்ற செலவுகள் மற்றும் அவசர முடிவுகளில் கவனம் தேவை.

    Advertisement

    வழிபாடு

    புதன்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானமளிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பசு மாடுகளுக்கு உணவு தானமளிப்பது நன்மையைத் தரும். விரயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும். அபிராமி அந்தாதியைப் படிப்பது ஏற்றத்தைத் தரும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Thulam natives can expect notable developments in career, finances, family life, and personal growth during the Aani month. Let's take a detailed look at the opportunities, challenges to watch out for, and the recommended remedies for this period.