கடக ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. வாயில தான் கண்டமே.. ரொம்ப கவனம்

  • ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    Advertisement

    இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், கடக ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    கடக ராசி பலன்

    கடகம் ராசியினருக்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பதவிகள் பறிபோவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடன் உடனிருந்தவர்களே சதி செய்வார்கள். மேலதிகாரிகள் விஷயத்திலும், எதிரிகள் விஷயத்திலும் கவனம் தேவை. உங்களுடைய எதிரிகள் மிகுந்த வலிமையாக இருப்பார்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் போன்றவை வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    ஆரோக்கியம்

    அலர்ஜி, சளி, தும்மல், இருமல் போன்றவற்றில் கவனம் தேவை. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் பேசும் வார்த்தையில் எச்சரிக்கை தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையே மிகுந்த கோபம் கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

    அனுகூலம்

    பிள்ளைகள் விஷயங்களில் அனுகூலம் காணப்படும். அவர்களுடைய படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பேரானந்தம் ஏற்படக்கூடிய காலகட்டம்.

    Advertisement

    சங்கடம் தீரும்

    உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். பெரிய பெரிய வெற்றிகள் ஏற்படக்கூடிய காலகட்டம். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் பெரிய அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உணவு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

    முன்னேற்றம்

    எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு பிரச்சனைகளுக்கும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ஏற்றங்கள் நிறைந்து காணப்பட்டாலும் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கக்கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும்.

    English Summary

    Aavani Month Rasi Palan: Kadagam rasi people may see positive changes in career, finances, relationships and new opportunities during this month.