ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், கும்பம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். கும்ப ராசியினர் கணவர், மனைவி இருவர் விஷயத்திலும் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். உங்களுடைய மறைமுக எதிரிகள் பலம் உயர்ந்துள்ளதால் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைத் தவிர்க்கும் சூழல் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகளும், அனுகூலமும் ஏற்படும். 70 வயதைக் கடந்தவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. படிக்கட்டில் மெதுவாக செல்வது நல்லது. பழக்கவழக்கத்தில் பேராசை படாமல் இருப்பது நல்லது. தங்கள் வயதை மறந்துவிட்டு சிறுவர் போல மற்றவர்களிடம் நடந்து கொள்வதை, தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இளம் வயதைச் சார்ந்த கும்ப ராசியினருக்கும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து வித மாற்றங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சேமிப்பு, முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகக்கூடிய நல்ல காலகட்டம். ஜாயிண்டுகளில் ஏற்படும் வழிகளில் கவனம் தேவை. தம்பதி சமேத தெய்வ வழிபாடுகளைச் செய்வது, உக்கிர தெய்வ வழிபாடுகளைச் செய்வது ஏற்றத்தைத் தரும்.கும்பம் ராசி பலன்
அனுகூலம்
நம்பிக்கை
வழிபாடு