ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், மகரம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். மகரம் ராசியினர் வண்டி வாகனம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளால் தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகள், சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் வண்டிகளில் செல்லும்போது கவனம் தேவை. பிள்ளைகளுடன் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம், அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. கணவன், மனைவி இருவருமே உடல்நலனில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். பயணங்கள் சமயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேகமாக செல்வது, போதைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை இயக்குது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு, பெருமாள் தாயார் உள்ள அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் கவனம் தேவை. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளியிடத்திலும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இனிமையான வார்த்தைகளை எல்லோரிடமும் பயன்படுத்துவது நல்லது.மகரம் ராசி பலன்
அனுகூலம்
கவனம்
வாக்குவாதம் வேண்டாம்