ஆவணி மாத பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் யோகம்.. குருவின் அருளால் சூப்பர் மாற்றம்

  • ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    Advertisement

    இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், ஆவணி மாதத்தில் மேஷ ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    மேஷ ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு இந்த ஆவணி மாதத்தில் நிறைய வெற்றிகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. ஏழரை சனி இருப்பதால் நிறைய டென்ஷன்கள் வந்து போகும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது நன்மையைத் தரும். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாமல் இருங்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

    Advertisement

    குரு பார்வை

    மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் கோபப்படுவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குரு பார்வை இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

    முயற்சிகளில் வெற்றி

    புதிய புதிய முயற்சிகளில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். அரசியலில் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியை தினந்தோறும் கேட்பது நன்மையைத் தரும்.

    Advertisement

    வழிபாடு

    வயிறு, தலைவலி, ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளை தலையில் போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பது நன்மை. குலதெய்வ வழிபாடு, மகான்கள் வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றங்களையும் தரும்.

    English Summary

    Aavani Month Rasi Palan: Mesham rasi people may see positive changes in career, finances, relationships and new opportunities during this month.