ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், விருச்சிக ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். விருச்சிக ராசியினருக்கு ஏற்றத்தைப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எல்லாவிதமான வெள்ளிகளும் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அனுகூலம் ஏற்படும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல ஏற்றங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். தைரியம் ஏற்படும். அசையும், அசையா பொருள்களின் சேர்க்கை உண்டாகும். விருச்சிக ராசியினர் வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். அப்பாவின் ஆரோக்கியம், ரத்த பந்த உறவுகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்களும், நம்பிக்கையும் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டம். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. எதிரிகள் உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் கூட அதில் வெற்றி பெறும் அற்புதமான அமைப்பு உள்ளது. யோசித்துக் கொண்டே இருப்பது, கவலைப்படுவது, சங்கடப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. திட்டமிட் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் வெற்றி காண்பீர்கள். எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும். இதயம் தொடர்பான பாதிப்புகள், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. கிருஷ்ணர் வழிபாடு சகலவித ஏற்றத்தைத் தரும்.விருச்சிகம் ராசி பலன்
தொழில்
ஆரோக்கியம்
நினைத்தது நடக்கும்
வெற்றி மேல் வெற்றி
வழிபாடு