ஆவணி மாத ராசிபலன் 2026: இந்த 3 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம்?.. பணவரவு, தொழில், பதவி உயர்வு

  • ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் வரும் 17 ஆம் தேதிபிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 7.50 மணிக்கு சூரிய பகவான் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    Advertisement

    இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், சூரியன் சிம்மத்தில் பெயர்ச்சியாவதால் மேஷம், ரிஷபம், மிதுன ராசிகள் குறித்து பார்க்கலாம்.

    மேஷ ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு இந்த ஆவணி மாதத்தில் நிறைய வெற்றிகள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. ஏழரை சனி இருப்பதால் நிறைய டென்ஷன்கள் வந்து போகும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்து வருவது நன்மையைத் தரும். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாமல் இருங்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

    Advertisement

    மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் கோபப்படுவது, டென்ஷனாவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குரு பார்வை இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

    புதிய புதிய முயற்சிகளில் இறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய அமைப்பு உள்ளது. வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். அரசியலில் அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியை தினந்தோறும் கேட்பது நன்மையைத் தரும்.

    Advertisement

    ரிஷப ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு மிகவும் அற்புதமான மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும். சனி வக்கிரமாகி குரு பார்வையில் இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய மாதமாக இருக்கும். இழந்த பெருமை, புகழ் என அனைத்தும் மீண்டும் பெறக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்துப் பார்க்காத அனைத்து விஷயங்களும் நடக்கும் யோகம் உண்டு.

    தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது போன்ற யோகம் ஏற்படும். காலையில் எழுந்ததும் குளித்து விடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும. உறவுகளுடன் வாக்குவாதம், சண்டைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் இணக்கமாக இருப்பது நன்மை பயக்கும். பெற்றோர், பெரியோரிடம் அன்பு செலுத்துவது நன்மை பயக்கும். அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். விநாயகர், துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மிதுன ராசி பலன்

    மிதுனம் ராசியினருக்கு சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்து மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் ஏற்படும்.

    Advertisement

    திடீர் புகழ், அதிர்ஷ்டங்கள், பண வரவு போன்றவை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். நிறைய ஏற்றங்கள் காணப்படும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூணமாக நீங்கும்.

    பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.

    English Summary

    Aavani Month Rasi Palan: In this astrological article, let us look in detail at the prospects regarding career, employment, and family for the zodiac signs Aries, Taurus, and Gemini during the month of Aavani.