ஐப்பசி மாத ராசி பலன்: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள் என்ன?

  • ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம், வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினர் கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் மனம் விட்டுப் பேசுவது நல்லது. துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும். உறவுகளிடம் எந்த வருத்தம் இருந்தாலும் அதனைத் தவிர்த்துவிட்டு பேசுவது நல்லது.

    தொழிலில் ஏற்றங்கள் உண்டாகும். 8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் பரிபூரணமாக நீங்கும். உங்கள் காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இறங்குவீர்கள். முடிக்காமல் இருந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். புதிய புரோஜக்ட்களை எடுத்து செய்வீர்கள். பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

    Advertisement

    பயணங்களின் போது கவனம் தேவை. பெண்களிடம் பேசும்போதும் சரி, மேஷ ராசி பெண்கள் ஆண்களிடம் பேசும்போதும் கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதிகள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. வண்டிகளில் செல்லும்போது பத்திரமாகச் செல்வது நன்மை பயக்கும். தலைக்கவசம் அணிவது நன்மையைத் தரும். தலைசுற்றல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு நீச்சபங்க ராஜயோகத்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். லாபம் ஏற்படும். தைரியம் உண்டாகும். வெளிநாட்டு தொழில்களில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். டிரான்ஸ்பர் கிடைப்பது, வீட்டில் இருந்து வேலை செய்யும் அமைப்பு போன்றவை கிடைக்கும்.

    Advertisement

    சொந்த நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கான சூழல் அமையும். நீண்ட நாட்களாக புரோமோஷனுக்காக காத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு திடீரென பெரிய ஏற்றம் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வருத்தப்பட்டுக் கொண்டிருநத விஷயங்களில் இருந்து வெளியில் வருவீர்கள்.

    தொழில் ரீதியாக முன்னேற்றம் பெறுவீர்கள். சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். அடுத்தடுத்து சுபச் செலவுகள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறப்புகளும், பெரும் முன்னேற்றமும் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். புதிய கடன்களை தைரியமாகப் பெறலாம். அடிவயிறு, கழிவுப் பாதை, முதுகுத் தண்டுவடம், கால், பாதம் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். 5 ஆம் இடத்தில் சூரியன் நீச்சமாக இருப்பதால் அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மையைத் தரும். பிள்ளைகள் வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல சொல்வது நல்லது.

    குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வரும் ஐப்பசி மாதத்தில் இருந்து அடுத்த 18 மாதங்களுக்கு மிகுந்த கவனம் தேவை. 2 இல் கேது 8 இல் ராகு வருவதால் வார்த்தைகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அடுத்த 18 மாதத்துக்கு லாட்டரி அடிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.

    Advertisement

    பணவரவு அற்புதமாக இருக்கும். வீடு வாங்குவது, வீடு விற்பது போன்ற அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பிஎஃப் பிரச்சனைகள் தீரும். வழக்குகள் எல்லாவற்றிலும் வெற்றி ஏற்படும். நிறைய நன்மைகள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றமும், மாற்றமும் உண்டாகும். துர்க்கையை மனதாரா வழிபாடு செய்வது சகலவித நல்ல முன்னேற்றங்களையும் தரும்.

    English Summary

    Aippasi month brings career growth, financial gains, new opportunities and sudden luck for Mesham, rishabam, mithunam (Aries, Taurus and Gemini) natives, while caution is advised in health, family and travel matters.