ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் கும்பம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.
சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் எனப் பண்டிகைகள் நிறைந்த மாதமாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்தக் காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம். கும்பம் ராசியினருக்கு மிகப்பெரிய நல்ல நன்மைகள் நடக்கக்கூடிய சுபமான மாதமாக இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதிசாரா குருப்பெயர்ச்சியின் மூலம் 7 ஆம் இடத்திற்கு குரு பகாவன் மாறி ராசியைப் பார்க்கிறார். ஏற்கனவே தர்மகர்மாதிபதி யோகம் அமைப்பில் சுக்கிரனும், புதனும் வலுவாக இருக்கின்றனர். 7 ஆம் அதிபதி இப்போது நீச்சபங்க ராஜயோக அமைப்பில் மாதம் முழுவதும் 9 ஆம் இடத்தில் இருப்பது என்கிற அமைப்பில் நல்ல கிரக சூழ்நிலைகள் உள்ளன. வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஏழரை சனி உங்களுக்கு முற்றிலும் விலகப் போகிறது. 2022, 2023, 2024 ஆம் ஆண்டு என கடந்த மூன்று ஆண்டுகளும் கும்ப ராசியினர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஜென்மசனியால் கடும் மன அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள். 30 வயதுகளில் இருக்கக்கூடிய அனைவருக்கும் கடுமையான மன அழுத்தம், பணி அழுத்தம், பண நெருக்கடி, கடன், ஆரோக்கிய குறைபாடுகள், நெருங்கிய உறவினர் இழப்பு, நட்பு விரோதம், காதலில் தோல்வி போன்றவற்றில் சிக்கி இருப்பீர்கள். இந்த அமைப்புகள் எல்லாமே விலகக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். மன பலம் அதிகரிக்கும். தைரியம் கிடைக்கும். எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை ஏற்படும். இந்த மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ராசியை குரு பார்ப்பதால் அருமையான நல்ல அமைப்பு ஏற்படும். இழந்தவற்றை திரும்பப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். இழந்த பெயர், வாக்கு, பணம், மதிப்பு, மரியாதை போன்றவற்றை மீட்டெடுப்பீர்கள். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு கும்ப ராசியினருக்கு ஏழரை சனி முற்றிலுமாக விலகுவதால் அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் அபாரமான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். படிப்படியாக ஐப்பசி மாதம் முழுவதும் முன்னேற்றம் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.கும்பம் ராசி பலன்
ஏழரை சனி விலகும்
மன பலம்
குரு பார்வை
தொட்டது துலங்கும்