மீன ராசிக்கு ஐப்பசியில் திறக்கும் அதிர்ஷ்ட கதவு.. கடன் முதல் வெளிநாடு யோகம் வரை கொட்டும் அதிர்ஷ்டம்

  • ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் மீனம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

    Advertisement

    சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் எனப் பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்தக் காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினருக்கு சுப மாற்றங்களைக் கொடுக்கக்கூடிய மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமையும். எதிர்பாராத நன்மைகள், அதிர்ஷ்டங்கள் உண்டாகும். 6 ஆம் அதிபதி 8 இல் மறைந்திருக்கிறதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். சூரியன் 8 இல் மறைந்து நீச்சபங்கமாவதால் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத அறிமுகங்கள் கிடைக்கும்.

    கடன் வாங்கும் அமைப்பு

    உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்காவிடினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நீங்கள் நன்றாக இருக்கக்கூடிய வகையில் நல்ல அமைப்புகளையும், ஆரம்பங்களையும் உருவாக்கும். பெளர்ணமி தினத்தின் அருகில் பிறந்தவர்களுக்கு பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. சிலருக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கும் அமைப்பு உள்ளது.

    Advertisement

    வெளிநாடு யோகம்

    சிலருக்கு வேலை மாற்றங்கள் ஏற்படும். வேலை மாற்றத்தின் மூலமாக அல்லது ஏதாவது ஒரு வகையில் தூர இடங்களுக்கு வெளிமாநிலம், வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. அதிசார குருப்பெயர்ச்சி 6 ஆம் இடத்துக்கு மாறி 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோருக்கு அதில் இருந்த தடைகள் நீங்கும்.

    ஆதாயம்

    வெளிமாநிலத்தில் செட்டிலாவதற்கான யோகம் உண்டாகும். படிப்படியாக மன தைரியம் அதிகரிக்கும். நிறைய வெற்றிகள் கிடைக்கும். அந்நிய மத, இன, மொழி பேசக்கூடிய நண்பர்கள் மூலாக ஆதாயங்கள் உண்டாகும். இதுவரை பட்ட கஷ்டங்கள், அனுபவங்களின் மூலமாக பாடம் கற்றுக்கொண்டு இனிமேல் நன்றாக இருப்போம் என்கிற எண்ணம் ஏற்படும்.

    Advertisement

    தொட்டது துலங்கும்

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நிறைய நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படக் கூடிய நல்ல காலகட்டம். குடும்பம், தொழில், மனம், உடலில் இருந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீங்களே தீர்த்துக் கொள்ளக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது.

    English Summary

    Aippasi month brings financial gains, salary hikes and opportunities for Meenam (Pisces) natives, while caution is advised in speech, family matters and health.