எதிர்பாராத அதிர்ஷ்டம்.. விருச்சிக ராசிக்கு ஐப்பசியில் காத்திருக்கும் மெகா யோகம்!

  • ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் விருச்சிகம் ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

    Advertisement

    சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு ராசிநாதன் நீச்சமாக இருப்பதால் எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய சுப விரயங்கள் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். வேற்று நாடுகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

    அனுகூலம்

    கோயில் திருப்பணிகளைச் செய்து மகிழ்வீர்கள். கோயில் கட்டுவது, கோயில்களுக்கான உதவிகளைச் செய்வது, அன்னதானம் செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும். எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்களிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவர்களுடன் உள்ள இடைவெளிகளைக் குறைத்துக் கொள்வது சுபிக்ஷத்தை தரும்.

    Advertisement

    சிக்கல் தீரும்

    உறவில் இருந்த கஷ்டங்கள் தீரும். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். இயற்கையாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அனுகூலமான காலகட்டமாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். வழக்குகளில் வெற்றிகள் உண்டாகும். எதிரிகள் ஒன்று சேரக்கூடிய காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

    முன்னேற்றம்

    உடன் பணியாற்றுபவர்கள், உடனிருப்பவர்களிடம் கோபப்படாமல் இருப்பது, பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய சுப செலவுகள் ஏற்படும். நல்ல விஷயங்களுக்காக நிறைய விரயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பேச்சில் மிகுந்த கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    வெள்ளிக்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானம் கொடுப்பது, எலுமிச்சம்பழம் ஊறுகாய் கொடுப்பது நன்மையையும், அனுகூலத்தையும் தரும். திங்கள்கிழமையில் சிவன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சிவ மந்திரங்கள் கேட்பது, கோளார் பதிகத்தை கேட்பது தைரியத்தையும், மேன்மையையும் ஏற்படுத்தும். உணவுக் குழாய் தொடர்பான பாதிப்புகள், வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

    English Summary

    Aippasi month brings financial gains, salary hikes and opportunities for Viruchigam (Scorpio) natives, while caution is advised in speech, family matters and health.