ஐப்பசியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்.. துலாம், விருச்சிகம், தனுசுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

  • ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஐப்பசி மாதம் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.

    Advertisement

    சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும்.

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கண் பார்வையை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் ஏற்படுவதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக கொள்ள வேண்டும். நிறைய யோக பலன்கள் கிடைக்கும்.

    தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 10 ஆம் இடத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    Advertisement

    செவ்வாய் நீச்சம் என்பதால் குடும்பத்தை விட்டு தொலைதூரம், உறவினர் வீடு, அப்பா அம்மா வீட்டுக்குச் சென்று வரக்கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும்.

    யோக பலன்கள் அதிகளவில் ஏற்படும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள், பிரிவுகள் எல்லாம் தீர்ந்து ஒற்றுமையோடு இருக்கக்கூடிய காலகட்டம். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எல்லாம் மீண்டும் செய்வதை தவிர்த்துவிட்டு, சரணடைவது நல்லது. விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு ராசிநாதன் நீச்சமாக இருப்பதால் எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நிறைய சுப விரயங்கள் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். வேற்று நாடுகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

    கோயில் திருப்பணிகளைச் செய்து மகிழ்வீர்கள். கோயில் கட்டுவது, கோயில்களுக்கான உதவிகளைச் செய்வது, அன்னதானம் செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும். எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்களிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவர்களுடன் உள்ள இடைவெளிகளைக் குறைத்துக் கொள்வது சுபிக்ஷத்தை தரும்.

    Advertisement

    உறவில் இருந்த கஷ்டங்கள் தீரும். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். இயற்கையாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அனுகூலமான காலகட்டமாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். குடும்பத்தினருடன், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். வழக்குகளில் வெற்றிகள் உண்டாகும். எதிரிகள் ஒன்று சேரக்கூடிய காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு கொண்டாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் 11 ஆம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். பாக்கியாதிபதி நீச்சத்தை அடைந்தாலும் கூட 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மாதத்தின் பிற்பகுதி அதாவது 15 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் அதிசாரப் பெயர்ச்சியாக 9 ஆம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கிறார்.

    அதிர்ஷ்டங்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கக்கூடிய யோகமான நேரம். கனவுகள் எல்லாம் நிறைவேறும். சந்தோஷம் நிறைந்திருக்கும். துயரம் பரிபூரணமாக விலகும். பாதிப்புகள், சங்கடங்கள் எல்லாம் தீரும். நினைத்தவை அனைத்தும் நடக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். வெற்றிகள் கிடைக்கும்.

    காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பண வரவு அற்புதமாக இருக்கும். வெற்றிகள் கிடைக்கும். தொழில் அற்புதமாக இருக்கும். வேலை, வியாபாரம் போன்றவை லாபகரமாக இருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு இருந்து வந்த தடைகள் தாமதங்கள் பரிபூரணமாக விலகும்.

    விரும்பிய வேலை, விரும்பிய துறை கிடைக்கும். நிறுவனத்திற்குள் டிரான்ஸ்பர் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். அப்பாவால் சிறிது செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வயதான தாய், தந்தைக்கு ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரும் என்பதால் கவனம் தேவை.

    English Summary

    Aippasi month brings family harmony, unexpected luck, career growth, financial gains and new opportunities for Thulam, Viruchigam and Dhanusu natives.