ஐப்பசி மாத பலன்கள்: புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த ஆவணி மாதம் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா, வேலை, தொழில், குடும்பம், காதல், திருமண யோகம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நவக்கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். கன்னி மாதம் எனும் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கவுள்ளது.
சூரியன் நீச்சமாகக் கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். சூரிய பகவான் துலாம் வீட்டிற்குள் வரும் மாதமே ஐப்பசி ஆகும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பமாகும் ஐப்பசி மாதம் நவம்பர் 11 ஆம் தேதி முடியவுள்ளது. இந்த மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி, கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என பண்டிகைகள் நிறைந்த மாதமாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27 ஆம் தேதி (நவம்பர் 13) ராகு கேது பெயர்ச்சி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் 1 முதல் 30 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம். சிம்ம ராசியினரின் ராசிநாதன் சூரியன் நீச்சமாக இருப்பதால் உறவுக்காரர்களால் தேவையில்லாத சங்கடமும், தொந்தரவும், மன வருத்தமும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. நிறைய நல்ல விஷயங்கள் கைவிட்டுப் போகும் என்பதால் கவனம் தேவை. பணம், முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன், அவர் சார்ந்த உறவுகள், மனைவி அவர்களது உறவினர் சார்ந்த விஷயங்களால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மீடியா, கணினி துறை, மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ், கெளரவங்கள் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடல் கடந்து தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு, ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தொழில் நஷ்டம், மன கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்வது மேன்மையைத் தரும். அஷ்டமத்தில் சனி பகவான் வக்கிரமாக இருப்பதால் எந்த காரியத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. கோபப்படுவது, உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். நரம்பு பாதிப்புகள், தலை முதல் கழுத்து வரையிலான பாதிப்புகள், மன அழுத்தம் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 24 வயது முதல் 72 வயது வரையிலான சிம்ம ராசியினர் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர் வழிபாடு அற்புதமா மாற்றத்தை ஏற்படுத்தும்.சிம்மம் ராசி பலன்
தொழில்
முன்னேற்றம்
வழிபாடு