ஆகஸ்ட் மாத பலன்: மேஷம், ரிஷபம், மிதுன ராசிகளுக்கு எப்படி இருக்கும்? அதிர்ஷ்டம், பரிகாரம் முழு விவரம்

  • August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு ஜூலை 27 ஆம் தேதிக்குப் பிறகு சனி வக்கிரம் ஆகியுள்ளது. அதாவது ஏழரை சனி உங்களுக்கு வக்கிரமாகியுள்ளதால் மந்தத் தன்மை நீங்கும். 12 ஆம் இடத்தில் உள்ள சனி வக்கிரம் பெற்றுள்ளாதல் புத்துணர்ச்சி பெறுவீர்கள். 5 க்கு உடைய யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருக்கிறார். சூரியனோடு புதன் சேர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் பெறுகிறது. 3 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார்.

    8 க்கு உரியவர் 3 இல் மறைந்த விபரீத ராஜயோகம் பெறுவீர்கள். எந்தவொரு சிகிச்சை முறையும் இல்லாமல் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் பெறும் காலகட்டம். பண வரவு நன்றாக இருக்கும்.

    Advertisement

    பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நகை, பத்திரம் போன்றவற்றை மீட்கும் அமைப்பு உள்ளது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். சூரிய பகவானை தினந்தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சுக்கிரன் 2 ஆம் தேதி நீச்சம் பெறுவதால் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். லட்சுமி குபேர யாகம் செய்தால் உங்களுக்கு அற்புதமான பண வரவு உண்டாகும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக கடை தொடங்குவது, கார் வாங்குவது, பெரிய முதலீகளை செய்து தவிர்ப்பது நல்லது. மனைவியின் உறவினர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு அற்புதமான மாதமாக இருக்கும். 11 க்கு உடைய சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். வக்கிரம் பெற்ற சனி உங்களுக்கு நிறைய பலன்களை அள்ளித் தரப்போகிறார். களத்திரகாரகன் 2 ஆம் இடத்தில் இருப்பதால் மனைவியால் பண வரவு ஏற்படும். 4 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்றி, புதனும் இணைந்திருப்பதால் புதாதித்ய யோகம் உண்டாகும்.

    ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கார் வாங்கும் யோகம் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். சூரியனோடு புதன் சேர்ந்திருப்பதால் மிகுந்த யோகங்கள் உண்டாகும். பேச்சு வன்மை அதிகரிக்கும். சபையில் மரியாதை ஏற்படும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களிம் இருக்கும் பலவீனங்களை சரி செய்து கொள்வது நன்மை பயக்கும். 3 ஆம் இடத்தில் குரு பகவான் மறைந்திருப்பதால் விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும்.

    தங்கம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையில் இன்ட்ராடே போன்றவற்றை செய்பவர்கள், நெட்வொர்க்கிங், டிப்ஸ் கொடுப்பவர்கள் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ரமாகி இருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சமூக வலைதளங்களில் புதிய கணக்கை ஆரம்பிப்பது, புதிய படிப்புகளை படிப்பது என எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றண் பெறுவீர்கள். லாபங்கள் அதிகரிக்கும். குழந்தை விஷயத்தில் சிறிய ஏமாற்றம் ஏற்படும். ஐவிஎப் சிகிச்சை போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தை சீரமைப்பது, டெக்கரேட் செய்வது, வீட்டை புனரமைப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. சொத்துகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். 6 க்கு உரிய செவ்வாய் பகவான் ராசியில் இருப்பதால் இந்த மாதம் முழுவதும் கோபம், டென்ஷன் அதிகமாக காணப்படும். மேலதிகாரிகளிடம் கோபம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    English Summary

    August matha palan: July is coming to an end, and August begins tomorrow. In this astrological article, we will look at the benefits and remedial measures for those belonging to the Mesham, rishabam, mithunam zodiac sign during this month.