August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசியினருக்கு ஏழரை சனி பாத சனியாக நடந்து கொண்டிருக்கிறது. ராசியில் ராகு, 6 ஆம் இடத்தில் குரு மறைந்திருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள். சனி பகவான் உங்களுக்கு நிறைய நன்மைகளைக் கொடுக்கப் போகிறார். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சனி பகவானால் நிறைய அனுகூலம் ஏற்படும். 5 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் யோகத்தில் அமர்ந்திருப்பதால் தொழிலில் அற்புதமான முன்னேற்றங்கள் காணப்படும். சாதுர்யமாக உங்களுடைய உழைப்போடு சேர்த்து திறமைகளைக் காட்டும் யோகம் உண்டாகும். 6 ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் புதிய வேலை, அடுத்தகட்ட பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். பழைய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். கடுமையான சுமைகள் எல்லாம் குறையும். 7 ஆம் இடத்தில் சூரிய பகவான் ஆட்சி பெறுகிறார். இதனால், வெளிநாடு யோகங்கள் ஏற்படும். குடியுரிமை, வெளிநாட்டு வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும். காதல் மலரக்கூடிய காலகட்டமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். 4 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் நீச்சமாகியுள்ளதால் கணவன், கணவன், மனைவிக்குள் இருந்த சண்டைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். வசீகரமாக மாறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். ஆலங்குடி குரு பகவான் வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றங்களையும் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும் யோகம் உண்டாகும். லட்சுமி தேவிக்கு குங்குமார்ச்சனை செய்வது ஏற்றத்தைத் தரும். அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை அதிர்ஷ்ட நாட்கள் - பெளர்ணமி, ஆடி வெள்ளி அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 12, 13 ஆம் தேதி வழிபாடு - முருகன், லட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு அதிர்ஷ்ட திசை - கிழக்குகும்பம் ராசி பலன்
பதவி உயர்வு
கடன் தீரும்
முன்னேற்றம்