August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசியினருக்கு சூரிய பகவான் ஆட்சி பெற்றுள்ளதால் அதிகாரம், பதவி இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களைத் தேடி வரும். இருக்கும் இடத்தில் நீங்கள் பிரதானமானவராக இருப்பீர்கள். அடுத்த படிநிலைக்கு செல்லும் யோகம் உண்டாகும். இதயம், மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். 8 க்கு உடையவன் ஆட்சி பெறுவதால் நரம்பு தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல் தளர்ந்து போவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வழக்குகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புள்ளதால் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் விமர்சிக்காமல் அமைதியாக இருப்பது நல்லது. சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய கருத்துகள், வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 4க்கு உடையவர் 6 ஆம் இடத்தில் இருப்பதால் உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் திருப்பம் ஏற்படும். 7 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற்று குடும்பத்தை சேர்த்து வைக்கப் போகிறார். துணையிடம் மீண்டும் சேருவது, பழைய காதலன் காதலி சேரும் யோகம் உண்டாகும். 5க்கு உடைய சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட வேண்டாம். ஐவிஎப் போன்ற சிகிச்சை முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிவன், சுக்கிர பகவான், சூரிய பகவானை வழிபாடுவது ஏற்றத்தைத் தரும். சூரியனார் கோயிலுக்குச் செல்வது, ரெட்ஹில்ஸ் ஞாயிறு கோயிலுக்குச் செல்வது ஏற்றத்தைத் தரும். சிவன் கோயிலில் இருக்கும் புறாக்களுக்கு கோதுமை தானமாக கொடுப்பது நன்மையைத் தரும். தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை பயக்கும். அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை அதிர்ஷ்ட நாட்கள் - ஆடி அமாவாசை அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 10, 11 ஆம் தேதி வழிபாடு - குரு வழிபாடு அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் அதிர்ஷ்ட திசை - வடக்குமகரம் ராசி பலன்
விமர்சனம் வேண்டாம்
கவனம்
பரிகாரம்