August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியினருக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ரமாகி இருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அற்புதமாக இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சமூக வலைதளங்களில் புதிய கணக்கை ஆரம்பிப்பது, புதிய படிப்புகளை படிப்பது என எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றண் பெறுவீர்கள். லாபங்கள் அதிகரிக்கும். குழந்தை விஷயத்தில் சிறிய ஏமாற்றம் ஏற்படும். ஐவிஎப் சிகிச்சை போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனத்தை சீரமைப்பது, டெக்கரேட் செய்வது, வீட்டை புனரமைப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் நீச்சமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. சொத்துகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனை சரியாகும். சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். 6 க்கு உரிய செவ்வாய் பகவான் ராசியில் இருப்பதால் இந்த மாதம் முழுவதும் கோபம், டென்ஷன் அதிகமாக காணப்படும். மேலதிகாரிகளிடம் கோபம், வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வேலை விஷயத்தில் கோபத்தை தவிர்த்து நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தேவையில்லாதவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மது குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சொத்து, குழந்தை விஷயத்தில் ஜாக்கிரதை. பண விஷயத்தில் எந்தவித குறைவும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கலை சம்பந்தப்பட்ட விஷயத்தை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் 3 இல் மறைந்து இருப்பது, ராசியில் செவ்வாய் இருப்பது ஆரோக்கியத்தல் பிரச்சனை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். விநாயகரை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். மகா கணபதிக்கான ஹோமம் செய்வது நல்லது. கொழுக்கட்டை வைத்து வழிபடுவது செய்வது நன்மை. அதிர்ஷ்ட தேதிகள் - ஆகஸ்ட் 16, 20 அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 21, 22, 23 வழிபாடு - பிள்ளையார், முருகர் வழிபாடு நல்லது. அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு அதிர்ஷ்ட திசை - கிழக்குமிதுனம் ராசி பலன்
வெற்றி மேல் வெற்றி
கோபம் வேண்டாம்
பண வரவு
வழிபாடு
அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை