ஆகஸ்ட் மாத பலன் 2026: ரிஷப ராசிக்கு அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு.. அதிர்ஷ்டம் கொட்டும்

  • August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட விரிவாக கட்டுரையில் பார்க்கலாம்.

    Advertisement

    அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு அற்புதமான மாதமாக இருக்கும். 11 க்கு உடைய சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். வக்கிரம் பெற்ற சனி உங்களுக்கு நிறைய பலன்களை அள்ளித் தரப்போகிறார். களத்திரகாரகன் 2 ஆம் இடத்தில் இருப்பதால் மனைவியால் பண வரவு ஏற்படும். 4 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்றி, புதனும் இணைந்திருப்பதால் புதாதித்ய யோகம் உண்டாகும்.

    யோகம்

    ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கார் வாங்கும் யோகம் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    Advertisement

    பதவி உயர்வு

    சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். சூரியனோடு புதன் சேர்ந்திருப்பதால் மிகுந்த யோகங்கள் உண்டாகும். பேச்சு வன்மை அதிகரிக்கும். சபையில் மரியாதை ஏற்படும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களிம் இருக்கும் பலவீனங்களை சரி செய்து கொள்வது நன்மை பயக்கும். 3 ஆம் இடத்தில் குரு பகவான் மறைந்திருப்பதால் விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும்.

    கவனம்

    தங்கம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையில் இன்ட்ராடே போன்றவற்றை செய்பவர்கள், நெட்வொர்க்கிங், டிப்ஸ் கொடுப்பவர்கள் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத கற்பனைகளைத் தவிர்ப்பது நல்லது. தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    தோல் பிரச்சனை, கைனகாலஜி பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவியால் பண வரவு, பார்ட்னர்ஷிப், வெளிநாடு, ஏற்றமதி, இறக்குமதி மூலமாக பணம் வரக்கூடிய யோகங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். கந்தன் கவசம், சுப்பிரமணிய புஜங்கம் போன்றவற்றை படிப்பது சகலவித முன்னேற்றங்களைத் தரும். சத்ரு சம்ஹார யோகம் செய்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை

    அதிர்ஷ்ட தேதிகள் - ஆகஸ்ட் 6 ஆம் தேதி. வரலட்சுமி விரதத்தன்று குங்குமார்ச்சனை செய்து வழிபாடு செய்வது நல்லது.

    Advertisement

    அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - ஆகஸ்ட் 19, 20

    வழிபாடு - முருகர், லட்சுமி வழிபாடு நல்லது.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, பச்சை

    அதிர்ஷ்ட திசை - தெற்கு

    English Summary

    August matha palan: July is coming to an end, and August begins tomorrow. In this astrological article, we will look at the benefits and remedial measures for those belonging to the Rishabam (Taurus) zodiac sign during this month.