August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசியினர் கடந்த காலகட்டங்களில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் மாறும். பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்றுள்ளதால் நீங்கள் பிரகாசமடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். உயர்ந்த எண்ணங்கள் ஏற்படும். மீடியா துறைக்கு முயற்சி செய்யும் பெண்களுக்கு அதற்கான யோகம் உண்டாகும். சிறப்பான பதவிகள் கிடைக்கும். சுக்கிர பகவான் நீச்சமடைந்துள்ளார். 3, 10க்கு உடையவர் நீச்சமாவதால் அலுவலகத்தில் கலகம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கெட்ட பெயர் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வேலை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்வோருக்கு இந்த மாதம் நடக்காது, அடுத்த மாதம் கண்டிப்பாக நடக்கும். குடும்பத்தில் சண்டை, வாக்குவாதம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் மற்றவர்களுக்காக நீங்கள் பேசினால் உங்கள் வேலையை இழக்கும் வாய்ப்பு ஏற்படும். 4க்கு உரிய செவ்வாய் பகவான் 11 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். துணை, துணையின் குடும்பத்தினருடன் பிரச்சனை ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தேவையில்லாத நண்பர்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிர பகவானுக்குரிய கோயிலுக்குச் செல்வது நன்மை பயக்கும். அருகிலுள்ள பெருமாள் கோயிலில் தாயார் லட்சுமியை வெள்ளை நிறத் தாமரை சாற்றி வழிபாடு செய்வது, குங்குமார்ச்சனை செய்வது ஏற்றத்தைத் தரும். நவக்கிரகங்களில் சூரியனைத் தவிர மற்ற கிரகங்களின் நிலை அவ்வளவு சாதகமாக இல்லை. நவக்கிரக வேள்விகள், ஹோமங்கள், 9 பிரதட்சணம் செய்து வழிபாடு செய்வது நல்லது. அதிர்ஷ்ட தேதிகள் - பிரதோஷத்தன்று சிவன் வழிபாடு செய்வது நல்லது. அமைதியாக இருக்க வேண்டிய நாட்கள் - 26, 27 வழிபாடு - நவக்கிரக வழிபாடு செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் அதிர்ஷ்ட திசை - வடக்குசிம்மம் ராசி பலன்
பணவரவு
சண்டை வேண்டாம்
கவனம்
அதிர்ஷ்ட நிறம், தேதி, திசை