ஆவணி மாதம் மேஷ ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணவரவு, திருமண யோகம், அதிர்ஷ்டம் தேடி வரும்

  • ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் மேஷ ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீ்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு நிறைய செலவுகள் ஏற்படும் காலகட்டம். மற்றவர்கள் உங்களைப் பற்றி நிறைய புறம் பேசுவார்கள். மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் அற்புதமான முன்நேற்றண் ஏற்படும். சனி வக்கிர கதியில் குரு பார்வையில் இருப்பதால் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானங்களும் வந்து சேரும்.

    செய்யக்கூடிய செலவுகள் சுபவிரயங்களாக மாறும். திருமண யோகம் கைகூடி வரும். இதுவரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த மாதத்தில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக அதன் மூலம் அனுகூலம் உண்டாகும். இதுவரை இல்லாத அளவுக்கு கொண்டாட்டங்கள் நிறையக்கூடிய மாதமாக இருக்கும்.

    Advertisement

    தடைகள் நீங்கும்

    பணவரவில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். புது செல்போன்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களுக்குத் தேவையான சில விஷயங்களை செய்து கொள்வீர்கள். செல்போன், லேப்டாம், ஏதாவது ஒரு கோர்ஸ் படிப்பது போன்ற சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். உங்கள் முகத்தைப் பராமரிப்பதற்கான செலவுகளை செய்து மகிழ்வீர்கள். முகத்தில் வசீகரம் உண்டாகும்.

    பெண் குழந்தைகளுக்கு வயிறு, மறைமுக ஸ்தானம் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்வது அல்லது கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு அமையும். தலைமைத்துவம், அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து, கெளரவம் கூடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    அதிர்ஷ்டம் காத்திருக்கு

    நீங்கள் செய்யும் அல்லது செய்யப் போகும் விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மையைத் தரும். அதிர்ஷ்டம் நிச்சயமாக இந்த ஆவணி மாதத்தில் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை வசப்படக்கூடிய அற்புதமான காலகட்மாக இருக்கும். குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். 20 முதல் 40 வயது உட்பட்டோருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    ஆவணி மாதம் நன்றாக இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ஆவணங்களில் கையெழுத்து போடும் வாய்ப்பு அமையும். சிறு சிறு தடைகள் வந்து போனாலும் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    English Summary

    Mesham rasi palan: Mesham rasi people may see financial growth, marriage prospects, new opportunities and increased luck during the Avani month.