மிதுன ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. 15 நாட்களுக்கு பிறகு வரும் சூப்பர் மாற்றம்

  • ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் மிதுன ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு சூரியனோடு சேர்ந்து புதன் அமர்ந்திருப்பதால் ஆவணி மாதம் முதல் 15 நாட்கள் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும். அதன் பிறகு குழப்பங்கள் தீர்ந்து மனம் தெளிவு பெறும் காலகட்டம். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை முடிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையும், எண்ணமும் பிறக்கும். செப்டம்பர் 2, 3 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான ராஜயோகம் தேடி வரும்.

    நிறைய நல்லவைகள் உங்களைத் தேடி வரும். புதன் சூரியன் இணைந்து புதாதித்ய யோகம் உருவாகிறது. சிறு சிறு தடைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள் அதன் மூலம் அலைச்சல் ஏற்படும். தெய்வ அனுகூலத்தோடு எல்லா விஷயங்களையும் செய்வீர்கள். செப்டம்பர் மாதத்தில் எடுத்த காரியங்களில் ஜெயம் பெறும் யோகம் உண்ாகும்.

    Advertisement

    புது முயற்சியில் வெற்றி

    எந்த புதிய விஷயங்களைச் செய்தாலும் அதை செப்டம்பர் மாதம் செய்வது ஏற்றத்தையும், நல்ல மாற்றத்தையும் தரும். பொருளாதார ரீதியாக சிறு சிறு பிரச்சனைகள் வரும். ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய இடமாற்றம், புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். நீங்கள் முன்னுக்கு வருவதற்கான அற்புதமான அமைப்பு உள்ளது.

    நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தயங்கிக் கொண்டே இருந்து வந்த அமைப்புகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் மூலமாக பெருமைகள் கிடைக்கும் காலகட்டம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். பாட்டு கேட்பது, மொழியின் மீது ஆர்வம் வரும் நல்ல காலகட்டம். ஆவணி மாத முதல் 15 நாட்கள் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

    Advertisement

    லாபம் கொட்டும்

    15 நாட்களுக்குப் பிறகு அற்புதமான வாழ்வு உண்டாகும். விளையாட்டுத் துறையில் ஆர்வம், உடற்பயிற்சியில் ஆர்வம் ஏற்படும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். உங்களை நீங்களே வெளிக்கொண்டு வருவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வரைவது, எழுதுவது, ஸ்டேஷனரி செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    நல்ல குருமார்கள் கிடைப்பார்கள். புதிய கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிய வாழ்க்கை ஏற்படும். கணவன், மனைவி மூலமாக வருமானம் உண்டாகும். 7 ஆம் இடம் வலுப்பதால் ஏதாவதொரு விதத்தில் லாபம் உண்டாகும். மனைவியின் பேச்சை கேட்டு நடந்தால் நிச்சயம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஊடல் தீர்ந்து காதல் பிறக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    English Summary

    Mithunam Rasi Palan: Mithunam rasi people may see financial growth, marriage prospects, new opportunities and increased luck during the Avani month.