சிம்ம ராசிக்கு 10 நாட்களுக்குப் பிறகு வரும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்

  • ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு வேலையில் சிறு சிறு பாதிப்புகள் வந்து கொண்டிருக்கும். செப்டம்பர் மாதம் தொடங்கியதும் உங்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். கேது சூரியனோடு சேர்ந்து இருப்பதால் தலைமைத்துவத்தை மலுங்கச் செய்யும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்துடன் இருக்க முடியாத வகையிலான அமைப்பு 15 நாட்களுக்கு உண்டு. செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு குடும்பத்துடன் சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

    குடும்பமாக புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பிறக்கும். திருப்திகரமான வாழ்க்கை உண்டாகும். வேலையில் சிறு சிறு பாதிப்புகள், தடங்கல்கள் வந்து போகும்.

    Advertisement

    முன்னேற்றம்

    ஆவணி மாதத்தின் முதல் 15 நாட்கள் பொறுமை காப்பது நன்மை பயக்கும். சிம்ம ராசியினர் வாய்ப்பு கிடைத்தால் பெளர்ணமியன்று நடைப்பயணம் மேற்கொள்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். ஏரி, ஆறுகளுக்குச் செல்வது நன்மை தரும். செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு நிறைய நன்மைகள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கும்.

    உங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். செல்போன் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்த பொருள்களை மாற்றுவீர்கள். வண்டியை சரி செய்வீர்கள். தடைபட்டிருந்த அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தடுத்து நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் அமைப்பு உண்டாகும்.

    Advertisement

    பண வரவு

    வேலையில் மட்டும் சிறிது கவனமாக இருப்பது நல்லது. உடைமைகள், பரிசுகள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. பண ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொப்பளங்கள், உடல் உஷ்ணம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. நிம்மதியாக தூங்குவது ஏற்றத்தைத் தரும். யாரிடமும் வாக்கு கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாமனார், மாமியாரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

    பூர்வீக சொத்து பிரிப்பதற்கான வாய்ப்பு, சொத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. அண்ணன், தம்பியிடம் கவனமாக இருப்பது நல்லது. வார்ததைகளில் மிகுந்த கவனம் தேவை. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மாணவர்களின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதல் 15 நாட்கள் தேர்வில் மிகுந்த கவனம் தேவை. செப்டம்பரில் வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

    Advertisement

    திருமண யோகம், குழந்தை பாக்கியம், புதிய தொழிலை தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது போன்ற அமைப்பு உள்ளது. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட இனி உங்களைப் புரிந்து கொள்வீர்கள். எல்லா காரியங்களிலும் ஏற்றம் பெறும் அமைப்பு உள்ளது.

    English Summary

    Simmam Rasi Palan: Simmam rasi people may see financial growth, marriage prospects, new opportunities and increased luck during the Avani month.