Weekly Rasi Palan: ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 7 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். தனுசு ராசியினருக்கு பாக்கியத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்திருப்பது பெரிய வெற்றியைக் கொடுக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாம் தீரும். நல்ல வேலை கிடைப்பது, பெரிய நிறுவனத்தில் அமருவது, கஷ்ட காலம் தீருவது என அமோகமான காலகட்டமாக இருக்கும். தொழில் ஸ்தானம் 10 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் அற்புதமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மெடிஷன், பேன்சி ஐட்டம், மேக்கப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பெண்கள் சார்ந்த துறைகளில் நிச்சயமாக வேலைவாய்ப்பு அமையும். 7 ஆம் இடத்தில் செவ்வாய் பலமாக அமர்ந்திருப்பதால் வீடு, சொத்து அமையும் யோகம் உண்டாகும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். 4 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் தாயாரின் ஆரோக்கியம், ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கை தேவை. துணைக்கு நல்லது நடக்கும் காலகட்டம். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது, உறவுக்காரர்களுடன் உள்ளூர், வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் பரிபூரணமாக நீங்கும். தனிப்பட்ட செல்வாக்கு கூடும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அம்பாள் வழிபாடு அனுகூலத்தை தரும். துணைக்கு ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் உங்களுடைய ஆதரவால் பனிபோல நீங்கிச் செல்லும். அர்த்தாஷ்டம சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும். உள்ளூர், வெளியூர் பயணங்கள் அனுகூலத்தைத் தரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். மகிழ்ச்சியும், நம்பிக்கையும், ஆத்ம திருப்தியும் ஏற்படும். அனுமன் வழிபாடு செய்வது அதிர்ஷ்டமும், ஆனந்தமும், அஷ்டலட்சுமி கடாட்சமும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். பாக்கியத்தில் பாக்கியாதிபதி அமர்ந்திருப்பது நல்ல பாக்கியங்களைத் தரும். அஷ்டமத்தில் குரு புதனுடைய நட்சத்திரத்தில் செல்வதால் அடிவயிறு, கழிவுப் பாதை, சிறுகுடல், பெருங்குடல் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீத நன்மைகளைத் தரும். ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வது முன்னேற்றத்தைத் தரும்.தனுசு ராசி பலன்
வீடு, சொத்து அமையும்
யோகம்
பயணங்கள்
வழிபாடு