தனுசு ராசிக்கு டபுள் ஜாக்பாட்.. பணவரவும் பதவி உயர்வும் தேடி வரும் ஆவணி மாதம்!

  • ஆவணி மாத பலன்கள்: சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்கள், நல்ல பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    சூரியன் சிம்ம வீட்டிற்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். இந்த ஆவணி மாதத்தில் செவ்வாய் புதனுடைய வீட்டில் உபஜய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குரு பகவான் உச்சமாகி கடக வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் சிம்ம வீட்டிற்கு வருகிறார். சூரியன் புதன், கேது இமைவு ஏற்படுகிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கிறார். சனி வக்கிரமாகி மீன ராசியில் இருக்கிறார். சந்திரன் தன்னுடைய பயணத்தை மீன வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு 5 ஆம் அதிபதியான செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். ராசிநாதன் 8 இல் மறைந்து உச்சமாக இருக்கிறார். லாபாதிபதியான சுக்கிரன் மாதத்தின் பிற்பகுதியில் 11 ஆம் இடத்திற்கு வருகிறார். தொழில் ஸ்தானாதிபதியான புதன் 10 ஆம் இடத்தில் உச்சமாக இருக்கிறார். பாக்கியாதிபதி சூரியன் மாதம் முழுவதும் பாக்கியத்தில் இருக்கிறார்.

    பணவரவு சூப்பர்

    7, 8, 9, 10 ஆகிய பாவங்களில் வரிசையாக கிரகங்கள் இருப்பது அற்புதமான அமைப்பாகும். அடுத்தடுத்து நன்மைகள் நடக்கும். பண வரவுகள் அற்புதமாக இருக்கும். கோபம் அதிகரிக்கும் காலகட்டம். கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். காசு, பணத்திற்கு குறைவு இருக்காது. குடும்பம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.

    Advertisement

    ஆன்மீக எண்ணம்

    தெய்வீக எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். காசி, கயா, கங்கை செல்லும் யோகம் உண்டு. குலதெய்வ தரிசனத்தை மேற்கொள்வீர்கள். திருப்பதி செல்லும் யோகம் உள்ளது. சிவ தரிசனம் கிடைக்கும். தெய்வீக கைகரியங்களில் ஈடுபடும் அமைப்பு உள்ளது. ஆலயம் சார்ந்த தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.

    புரோமோஷன்

    பதவி, பட்டம் கிடைக்கும் யோகம் உண்டாகும். மேற்படிப்பு படிக்கம் அமைப்பு உள்ளது. 11 ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் இருப்பது பெண்கள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எல்லாவற்றிலும் சாதகமான அமைப்பு உண்டு. தொழிலில் வெற்றி கிடைக்கும். சட்டப்பூர்வமான போராட்டங்களில் வெற்றி ஏற்படும். கடன், நோய், வம்பு, வழக்குகள் தள்ளிப்போகும் அமைப்பு.

    Advertisement

    முன்னேற்றம்

    எல்லா விஷயங்களிலும் ஒரு கூடுதல் நிம்மதி ஏற்படும். கெளரவம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்படும். மாணவர்களுக்கு சிறந்த காலகட்டமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மரியாதை அதிகரிக்கும். ஏற்றம் நிறைந்த மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும்.

    English Summary

    Dhanusu Rasi Palan: Dhanusu rasi people may see financial growth, marriage prospects, new opportunities and increased luck during the Avani month.