அசுர வளர்ச்சி பெறும் தனுசு ராசி.. செவ்வாயின் அருளால் அடுத்தடுத்து வரும் யோகம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 3 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி அற்புதமான வாரமாக இந்த வாரம் இருக்கும். செவ்வாயின் பார்வை இருப்பதால் அசுர வளர்ச்சியைக் கொடுக்கும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் குரு, புதன் இருப்பதால் குழந்தையைப் பற்றி தேவையில்லாத அதீத எண்ணங்கள் ஏற்படும். சுப விரயங்கள் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், கேது இருப்பதால அரசியல், அரசாங்கம் தொடர்பான தொடர்புகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    அனுகூலம்

    பிள்ளைகள் விஷயத்தில் யோக பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அனுகூலம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் எல்லாம் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

    பிரச்சனை தீரும்

    உறவுகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சவால்கள் தீரும். ஹார்மோன் குறைபாடுகள், சர்க்கரை, முதுகு வலி, கால் வலி தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. வேலை ஆட்களுக்காக, சக ஊழியர்களுக்காக, மேலதிகாரிகளுக்காக உங்கள் குடும்பத்தினரை உதாசீனப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத கற்பனைகளில் இருந்து உங்களை நீங்களே வருத்திக் கொள்வீர்கள்.

    Advertisement

    யோகம்

    யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு கட்டுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற அற்புதம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஆன்மீக நாட்டம், ஆன்மீக கெளரவம் உண்டாகும். அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

    வழிபாடு

    இந்த வாரத்தின் இரண்டாம் பகுதி அற்புதமாக இருக்கும். நிறைய பிரச்சனைகள் ஓயக்கூடிய அற்புதமான காலகட்டம். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சகலவித நன்மைகளைத் தரும். அனுமன் சாலிஷா தினந்தோறும் கேட்பது தோஷங்களில் இருந்து நிவர்த்தியைத் தரும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Dhanusu rasi people during this week of August 19 to 23.