Rasi Palan This Week: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்..திடீர் அதிர்ஷ்டம் வரப்போகுது


  • Dhanusu Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

    அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

    தனுசு ராசியினருக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் யோகம் ஏற்படும்.

    திடீர் அதிர்ஷ்டம்

    உத்தியோகம், தொழிலில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். மதிப்பு மரியாதை கூடும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், புரிதலும் ஏற்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

    Advertisement

    கவனம்

    கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளை உருவாக்குவதற்கு உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த முயற்சியை மேற்கொள்வார்கள் என்பதால் உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பதும் நன்மை பயக்கும். கடல் கடந்த பயணங்கள் சிறந்த பயணமாக அமையும்.

    பண வரவு

    அமோகமான காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் சுக்கிரன், குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் உங்களுக்கு சாதகமாக முடியும் காலகட்டமாக இருக்கும். பணம், காசிற்கு தட்டுப்பாடே இருக்காது. கணவன், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு உபாதைகள், பின்புற வலிகள் அதிகமாக இருக்கும். உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.

    Advertisement

    வழிபாடு

    கடனால் சிறு அழுத்தம் ஏற்படும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வேல்மாறல், சுப்பிரமணிய புஜங்கத்தை தினந்தோறும் படிப்பது ஏற்றத்தைத் தரும். லக்கினம், ராசிக்கு குரு பார்வை இருப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்மைகள் பெறக்கூடிய நல்ல காலகட்டம்.

    English Summary

    Dhanusu Rasi Palan: This week may bring positive progress and financial improvement for Dhanusu rasi people. Family support, career growth, and new opportunities may increase happiness and confidence. Patience, spiritual activities, and avoiding unnecessary stress will help maintain peace and success throughout the week.