Dhanusu: தனுசு ராசிக்கு உச்ச குருவால் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிழந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி பெண்களுக்கு ஆன்மீக நம்பிக்கை, நாட்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த ஆகஸ்ட் மாதத்தில் ராசிநாதன் உச்சமாகி இருப்பதால் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். சிறிய சிறிய முயற்சிகள் போட்டாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உங்களுக்குத் தேவையான வாய்ப்புகள் கண்டிப்பாக உங்களை வந்து சேரும். வேலை போகும் நிலைமை இருந்தாலும் அதனை விட்டுவிட்டாலும் அதை விட சிறந்த வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    Advertisement

    வெளிநாட்டு யோகம்

    நல்ல மணவாழ்க்கை கிடைக்கும். வெளிநாட்டு யோகம் உண்டாகும். உயர்கல்வி படிப்பதற்கு, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாமனார், மாமியாரால் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு மேல் அந்த நிலைமைகள் மாறும். நிறைய விஷயங்கள் உங்களுக்கு கணவருக்கும் ஒத்துப்போகும். அந்நியோன்யம் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து மாப்பிள்ளை கிடைப்பார்கள்.

    ஆரோக்கியம்

    வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் மாப்பிள்ளை அமையும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இந்த மாதம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீர்ச்சத்து உடம்பில் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். உடல் சூடு, முடி கொட்டுதல், கண் பொங்குவது, கொப்புளம் வருவது போன்றவை அதிகரிக்கும். நீர்ச்சத்து காய்கறிகள், பழங்களை அதிகரிப்பது நல்ல. தோல் பிரச்சனை, அலர்ஜி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    வெற்றி மேல் வெற்றி

    மன அழுத்தம் வந்து போவதற்கான அமைப்பு உண்டாகும். குழந்தைகள் பற்றிய கவலைகள் குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களிடம் அவர்கள் பாசம் காட்டும் தன்மை அதிகரிக்கும். வங்கித் தேர்வு, மத்திய அரசு தேர்வு போன்றவற்றில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கல்வி, வேலை போன்ற விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட நிறம் - 9. வெள்ளை கொண்டைக் கடலை, மஞ்சள் வாழைப்பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சை நிற உடைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு உதவுவது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Dhanusu (Sagittarius) sign during the month of August.