குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: கடக ராசிக்கு புதிய வேலை, பதவி உயர்வு.. அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

  • குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு உச்சகுருவாக வீட்டில் இருந்தாலும் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த அதிசார குருப்பெயர்ச்சி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். எல்லா பொறுப்புகளையும் உங்கள் தலையில் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை மாறும். காசு பணம் வந்தாலும் அதனை சேர்க்க முடியவில்லை, ஓய்வெடுக்க முடியவில்லை என்கிற நிலைமைகள் எல்லாம் மாறும்.

    Advertisement

    அனுகூலம்

    பணத்தை உங்களுக்காக செலவு செய்யத் தொடங்குவீர்கள். நிம்மதியாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். கடன் அமைப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 6 ஆம் இடம் வலுப்பதால் கடன் அமைப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 6 ஆம் இடத்தை குரு பார்க்கும்போது வயிறு சம்பந்தப்பட்ட, அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

    முன்னேற்றம்

    சரிவிகித உணவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிடுவது, உப்பு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வரும் 3 மாதங்கள் அதிக எடை கூடுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 2 ஆம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருவதால் சவால்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    Advertisement

    சொத்துக்கள் யோகம்

    வண்டி, வாகனங்கள் வாங்குவது, நிலம், வீடு போன்ற புதிய சொத்துக்கள் வாங்குவது, தொழில் ஸ்தாபனம் உருவாக்குவது, பொருளாதாரத்தில் அடுத்த படிநிலைக்கு செல்வது போன்ற யோகம் உள்ளது. தனக்குத் தானே பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். குடும்ப ஸ்தானத்துக்குள் குரு பகவான் வருகிறார். குடும்பத்தில் விருத்தி ஏற்படும்.

    திருமண யோகம்

    திருமண யோகம் உண்டாகும். குடும்பத்திற்குள் புதிய வரவு ஏற்படும். மனதிற்குப் பிடித்த மன வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடக ராசியில் வயதான தம்பதிகளுக்கு பேரன், பேத்தி கிடைக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். சொந்தத்தில் திருமணத்தை தவிர்ப்பது இந்த காலகட்டத்தில் நல்லது. எந்த காரணம் கொண்டும் பிள்ளைகளின் திருமண வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    குரு அதிசாரப் பெயர்ச்சியில் கடன், ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். யார் உங்கள் எதிரி என்பதில் கவனம் தேவை. தேவையில்லாதவர்களிடம் சண்டை போடுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய கடன்களை வாங்காமல் இருக்க வேண்டும். தவணையில் லாப்டாப், கார் போன்ற பொருள்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட கடக ராசியினருக்கு கொழுப்பு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் தினந்தோறும் விநாயகர் அகவல் கேட்பது நன்மையை பயக்கும்.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring Kadagam Rasi natives financial growth, property gains, marriage prospects, family happiness, and success, while advising caution with debts and health.