குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு நிம்மதியான தூக்கம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். மன அழுத்தம், வேலை அழுத்தம் காரணமாக இருந்து வந்த தூக்கமின்மை நீங்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல உணவு, நல்ல தூக்கம், நிம்மதி கிடைக்கக்கூடிய அமைப்பு. 12க்கு குரு வரும்போது நிம்மதி உண்டாகும். செலவுகள் அதிகமாக இருந்த நிலைமைகள் மாறி கட்டுக்குள் வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. நகைத் தொழில், ஏற்றுமதி தொழில், சேவைத் துறை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், மாற்றம் வரும். வேலை அமைப்புகளில் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், உள்ளூர் இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விசா, பிஆர், சிட்டிசன்ஷிப் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிமாநிலங்களில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த வந்த தடைகள் நீங்கும். நல்லபடியாக திருமணக்கும் நடக்கும் யோகம் ஏற்படும். திடீர் திருமண யோகம் ஏற்படும். 7 ஆம் இடத்தில் சனி இருப்பதால் ஜாதகம் பார்த்து திருமண் செய்வது நன்மை பயக்கும். காதல் திருமணத்துக்கு குடும்பத்தில் பச்சைக் கொடி காட்டுவார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கன்னிக்கு நல்ல பணம் சம்பாதித்திருந்தாலும் மற்றவர்களுக்காக தவிர்க்க முடியாத செலவுகளை செய்திருப்பீர்கள். பெரியவர்களுக்கு மாறி மாறி மருத்துவச் செலவுகள் வந்து போயிருக்கும். அந்த நிலைமைகள் இனி பரிபூரணமாக நீங்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். என்னவிதமான முதலீடுகளை செய்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆடம்பரமாக இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது. தங்க நகை வாங்கும் அமைப்பு உள்ளது. தங்கம், வெள்ளி, காப்பர், இடிஎஃப் முதலீடுகளை செய்ய ஏற்ற காலகட்டம். தினந்தோறும் வீட்டில் அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது நன்மை பயக்கும். தினந்தோறும் 15 நிமிடம் தியானம் செய்வது நன்மை பயக்கும். எள் தானமாகக் கொடுப்பது நல்ல மாற்றங்களைத் தரும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது மேன்மையைக் கொடுக்கும். ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.கன்னி ராசி பலன்
இடமாற்றம்
திருமண யோகம்
சுபச் செலவுகள்
முன்னேற்றம்
பரிகாரம்