குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: கும்ப ராசிக்கு அடுத்த 3 மாதங்கள்.. காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

  • குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    கும்பம் ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு 7 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். இதுவரை உடல்நலக் குறைபாடு, வயிறு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நரம்பு தொடர்பான பாதிப்புகள் எல்லாம் இனி பரிபூரணமாக நீங்கும். வரும் 3 மாதத்தில் ஆரோக்கியத்தில் இருந்து குறைபாடுகளுக்கான சிகிச்சைகளைப் பெறுவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    முன்னேற்றம்

    மன ரீதியிலான அழுத்தத்தில் இருந்து நிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அன்றாட வாழ்க்கையிலுமே உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள் அந்க நிலைமைகள் எல்லாம் மாறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல சம்பளம், நல்ல வேலை என்ற அமைப்பு இருக்கும்.

    குழந்தை பாக்கியம்

    தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்தும் அமைப்பு உள்ளது. தொழில், வேலை மூலமாக வெற்றிகள் உண்டாகும். குழந்தை விஷயத்தில் நல்ல நன்மைகள் நடக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புரிதல், பரஸ்பரம் ஏற்படும். குழந்தை பேறுக்கான சிகிச்சைகளில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. இயற்கையாக கருத்தரிக்கும் யோகமும் உண்டு. பிறக்கும் குழந்தை நல்ல நேரத்தில், நல்ல குழந்தையாகப் பிறக்கும் யோகம் உண்டாகும். உங்கள் முன்னோர்களே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்கள்.

    Advertisement

    கடன் குறையும்

    கழுத்தை நெறிக்கும் கடன் அமைப்புகளில் இருப்பீர்கள். கலக்கம், குழப்பம் என்ற நிலைமைகள் இருந்திருக்கும். வீட்டுக் கடன், நகைக்கடன் என உங்களைச் சுற்றி ஏராளமான கடன்கள் இருக்கும். சொத்துக்களை விற்று கடனைக் கட்டுவது, வட்டியில்லாத கடன் வாங்கி கடனை அடைப்பது போன்ற அமைப்பு உள்ளது. கணவன், மனைவி ஒற்றுமையைக் குலைக்கக்கூடிய சூழல் ஏற்படும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

    பரிகாரம்

    கணவன், மனைவியைச் சுற்றி நிறைய கண் திருஷ்டி இருக்கும். அதனால், மூன்றாம் நபர்களின் தலையீடு குடும்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரகசியங்களை காப்பது நன்மை பயக்கும். உங்களுடைய வாழ்க்கையை பிரைவைட்டாக வைத்துக் கொள்வது நல்லது. சதுர்த்தசி விரதம் இருப்பது நன்மை பயக்கும். தடைகள் அகலும். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை பரிபூரணமாக நீங்கும்.

    Advertisement

    வழிபாடு

    சதுர்த்தி தினத்தன்று விநாயகர் கோயிலில் சிதறு தேங்காய் உடைப்பது குறையும். எதிர்மறையான தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவறை, பெட்ரூம், கால் மிதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மேன்மையைத் தரும்.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring Kumbam Rasi natives new opportunities, career growth, financial improvement, and relationship harmony, while advising caution in business partnerships and debt.