குரு அதிசார பெயர்ச்சி: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதில் மட்டும் கவனம்

  • குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், கடகம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு உங்களுடைய ஆரோக்கியம், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் தலை, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் கடந்த ஓராண்டாக நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். அடுத்த 3 மாதங்களுக்கு வெளியில் இருந்து வந்து சேர வேண்டிய பணம் எல்லாம் வந்து சேரும்.

    ஆரோக்கியம்

    குடும்ப ஸ்தானத்தில் குரு போகும்போது அந்த இடத்துக்கு ஸ்தானம் பலம் இருக்காது. குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு கண்டம் ஏற்படும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில், மூத்த மகனின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூக்கு, பல், இடது கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், பண வரவு குறையவே குறையாது.

    Advertisement

    பணவரவு கொட்டும்

    பண, குடும்ப, வாக்கு, தன ஸ்தானத்தில் தன ஸ்தானம் மட்டுமே அடிவாங்கியிருந்திருக்கும். இப்போது தன ஸ்தானம் நன்றாக இருப்பதால் பணவரவு, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள், பிரிவுகள் போன்றவை எல்லாம் பேச்சுவார்த்தை மூலமாக முடிப்பீர்கள். ஆடிட்டர், வழக்கறிஞர், ஆன்மீகவாதி மூலமாக பிரச்சனைகள் சரிசெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    புதிய வேலைவாய்ப்பு

    யாருடனாவது சண்டை போட்டிருந்தால் அந்த நிலைமைகள் மாறும். சண்டையை பெரிதாக்காமல் செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் வேலையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பேருக்கு வெளியூர் செல்வதற்கா வாய்ப்பு, இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

    Advertisement

    முன்னேற்றம்

    குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருவதால் மனைவியின் ஆரோக்கியம், கணவரின் ஆரோக்கியத்தில், வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய எதிரிகள் கொடுத்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கும். எதிரிகள் காணாமல் போவார். காப்பீடு பணங்கள் வந்து சேரும்.

    பதவி உயர்வு

    எதிர்பார்க்காத பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளாக அடுத்தகட்டத்துக்கு பதவி உயர்வு பெறக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களை பெரிய மனிதர்களாக மற்றவர்கள் பார்ப்பார்கள். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை, தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். அந்தஸ்து உயரும். குடும்ப வாழ்க்கையில், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring favourable changes for Kadagam (Cancer) natives, including marriage prospects, financial gains, property benefits, career promotions, educational opportunities and overseas travel, along with recommended spiritual remedies and health-related precautions.