குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், மகரம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
மகர ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். மகர ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். மகர ராசியினருக்கு அஷ்டமத்துக்கு குரு வருவதால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். குழந்தைகள் விஷயத்தில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு எதிர்பாராத குழந்தை பாக்கியம் கிடைக்கும். கெட்ட உறவுகள் ஏற்படும் காலகட்டம் என்பதால் திருமணமானவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பின்புற வலி, இடுப்பு வலி, கிட்னி ஸ்டோன், அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. எலும்பு முறிவு ஏற்படுவது, பொருள்கள் காணாமல் போவது, திருடு போவது, மறந்து வைத்து விடுவது போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளது. பணம், நகை தொடர்பான ரசீது போன்றவை காணாமல் போகும் வாய்ப்புள்ளது. பண வரவுக்கு பற்றாக்குறை இருந்திக்கும். வேலைவாய்ப்பில் பிரச்சனை வரும் என்பதால் வேலையில் மிகுந்த கவனம் தேவை. இடமாற்றம் செய்வது வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தும். வரிகளை சரியாக செலுத்தாவிடில் நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள், பிசினஸ் தொடர்பான விஷயங்களில் வெளிப்படையாக இருப்பது நல்லது. பொய் சொல்லி மாட்டிக் கொள்ளவது, மற்றவர்களுக்குப் பரிந்து பேசி சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அஷ்ட ஸ்தானத்திற்கு குரு போவதால் நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதில் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு எதிராக வருவது, ஜெயிலுக்கு செல்லும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. விரயத்துக்கு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு, 4 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் நல்ல பண வரவு உண்டாகும். கடன் கிடைக்கும். வீட்டில் சந்தோஷம், சுபிக்ஷம், நிம்மதி ஏற்படக்கூடிய காலகட்டம். மற்றவர்களுக்காகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. திருமணம் தாண்டிய உறவு போன்றவை வரக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. யாரோ செய்த குற்றத்திற்கு தண்டனை வருவதற்கான அமைப்புள்ளது. நெய் அல்லது ஒரு கிராம் தங்கம் அல்லது கொண்டைக் கடலை வேகவைத்து சிவன் கோயிலுக்கு தானம் செய்வது நன்மை பயக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஆனால், கடன் குறையாது. இருக்கும் பிரச்சனை பெரிதாகும் வாய்ப்புள்ளது. வேலையை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய ஒரு சொத்தை விற்று வீடு வாங்குவது, கடனை அடைப்பதற்கான அமைப்பு உள்ளது. சொந்த ஊரில் இருப்பது நன்மை பயக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் சிலருக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாராத குழந்தை பாக்கியம் உண்டாகும்.மகர ராசி பலன்
கவனம்
பேச்சில் கவனம்
பண வரவு
பரிகாரம்
வீடு வாங்கும் யோகம்