Guru Adhisara Peyarchi: மிதுன ராசிக்கு அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்ட காலம்.. குரு தரப்போகும் சர்ப்ரைஸ்!

  • குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார்.

    Advertisement

    தனுசு, கும்பம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். மிதுன ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு சிறிய வயதில் இருந்தே வீட்டின் பொறுப்பை எடுத்துக் கொள்ள கூடியவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய சகோதரன், சகோதரிகளுக்கு திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டாகும். கழுத்து, இடது காது, இடது கை, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. காது, மூக்கு, தொண்டை பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    குரு பார்வை

    குரு கேது சேர்ந்தால் தொண்டையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 3 ஆம் இடத்துக்கு குரு பார்ப்பதால் மற்றவர்கள் பார்வையில் மிகுந்த நல்லவர்கள் போல தென்படுவீர்கள். ஆனால், உங்களுக்குள் சிறிய ஒருவிதமான எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். எந்தவொரு முயற்சியாக இருந்தாலும் அவை ஒருமுறைக்கு, இருமுறை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

    திருமண யோகம்

    குருவின் பார்வை பலம் 7 ஆம் இடத்தை செயல்படுத்துவதால் திருமண யோகம் ஏற்படும். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு உங்களுடைய துணை மிகுந்த உதவியாக இருப்பார்கள். கணவரின் உதவி, அறிவுரை போன்றவை கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்துக்கு குருவின் நேரடி பார்வை கிடைக்கும். கேதுவுடைய பார்வையும் இருக்கும். முன்னோர்கள் சம்பந்தப்பட்ட தோஷம், சொத்துக்கள் பிரச்சனை தீரும்.

    Advertisement

    பணவரவு கொட்டும்

    முன்னோர்களிடம் இருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். சொத்துக்கள் வந்து சேருவதற்கான நேரம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் எல்லாம் சரியாகும்.

    கவனம்

    லாப ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். நண்பர்களால் வெற்றிகள் ஏற்படும். பெரியவர்களால், நண்பர்களால், மூத்தவர்களால் சந்தோஷம் ஏற்படும். நிறைய பணம், பதவி உயர்வு வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். செல்போனில் பேசும்போது, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும்போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வீடு வாங்கும் யோகம்

    காது, மூக்கு, சைனஸ் தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. எதிர்பார்க்காத சந்தோஷமும், எதிர்பார்க்கக் கூடிய நல்ல விஷயங்களும் நடக்கும் யோகம் உண்டு. வீடு வாங்குவது, கிரகப் பிரவேசம் நடப்பது போன்ற யோகம் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 80 சதவீதம் மேன்மையைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். வீட்டின் இடதுபுறத்தில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு தேன், நெய் கொடுத்து வரும் 3 மாதங்களுக்கு செய்வது அனைத்து விதமான நன்மைகளையும் தரும்.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring favourable changes for Mithunam (Gemini) natives, including marriage prospects, financial gains, property benefits, career promotions, educational opportunities and overseas travel, along with recommended spiritual remedies and health-related precautions.