ரிஷப ராசிக்கு அடுத்த 84 நாட்கள் ஜாக்பாட்!.. வீடு, பணம்.. கடன் தீர குரு தரும் அதிர்ஷ்டம்!

  • குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், ரிஷபம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு அடுத்த 84 நாட்களுக்கு அற்புதமான யோகம் ஏற்படும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள், ஆவணங்கள் தொடர்பான பாதிப்புகள், ஒயரிங், பைப்பிங், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். வண்டி வாகனங்களில் உள்ள பழுதுகளை நீக்குவீர்கள்.

    அனுகூலம்

    பெண் குழந்தைகள் பெரிய மனுஷியாகக் கூடிய பாக்கியம் உள்ளது. சொந்த பந்தங்களுக்கும் இருக்கும் பிரச்சனைகளை அமர்ந்து பேசி முடிப்பீர்கள். மார்பகம், நெஞ்சகம் சார்ந்த பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நுரையீரலில் நீர் கோர்ப்பது, தொற்றுநோய் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடக்காது என்ற நினைத்த நல்ல விஷயங்கள் இனி நடக்கும்.

    Advertisement

    குரு பார்வை

    அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை விழுவதால் எதிர்பாராத பயணங்கள், எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். அப்பாவுடைய சொத்துக்கள் கிடைக்கும். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தசம ஸ்தானம் எனும் தொழில், கர்ம ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    முன்னேற்றம்

    தொழிலில் இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த வழக்குகள் தீரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரய ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் பெட், கட்டில் மாற்றும் வாய்ப்புள்ளது. கெண்டைக் கால் வலி, குதிகால் வலி, விட்டமின் குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

    Advertisement

    கடன் தீரும்

    குரு, கேது சேர்வதால் பெரியவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கிரெடிட் கார்டு லோன் போன்ற சில லோன்களை அடைக்கும் அமைப்பு உள்ளது. இருக்கும் தொழிலில் இருந்து வேறு தொழிலுக்கு மாறுவதற்கான யோகம் ஏற்படும். பணம், பொருளாதாரத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படும். அம்மா, பாட்டி போன்றவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்தபந்தங்களால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நிலப் பிரச்சனைகள் சரியாகும்.

    English Summary

    Guru Adhisara Peyarchi 2026 is predicted to bring favourable changes for Rishabam (Taurus) natives, including marriage prospects, financial gains, property benefits, career promotions, educational opportunities and overseas travel, along with recommended spiritual remedies and health-related precautions.