குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், துலாம், சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும்.
அந்த வகையில, துலாம் ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு யோகம் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு யோகங்கள் கொட்டும் அமைப்பு உள்ளது. தற்போது, எதிர்பார்க்காத விருதுகள், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பெரிய பெரிய வழக்குகள் எல்லாம் முடிவடையும். முனைவர் பட்டம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். தட்டிப்போன திருமணம் நடக்கும். காதல் கைகூடும். குழந்தை பிறக்காது என்று நினைத்தவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். அரசாங்கத்தின் மூலமாக பெரிய விருதுகள் கிடைக்கும். பெரிய பண வரவு ஏற்படும். காணாமல் போன சொத்துப் பத்திரங்கள், தங்கம் போன்றவை கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். மறுமணம் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிகள் மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. லாப ஸ்தானத்தில் குரு அமருவதால் கால் முட்டி, விட்டமின் குறைபாடு, எலும்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகளுக்கு விருது, அங்கீகாரம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் செல்ல வேண்டும் என்று நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். மூன்று மாதத்திற்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கும் காலகட்டம். பெரிய கெளரவமான இடத்தில் அமரும் யோகம் உண்டு. நல்ல பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். திருமண யோகம் ஏற்படும். காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வீடு வாங்குவது, கிரஹப் பிரவேசம் செய்யும் அமைப்பு உள்ளது. 10க்கு 10 மதிப்பெண் கொடுக்கும் அளவுக்கு நன்மைகள் ஏற்படும். மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்டிரோக், அட்டாக் போன்றவற்றில் கவனம் தேவை. பண வரவு அபரிமிதமாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும். காதல் கைகூடும்.துலாம் ராசி பலன்
சொத்துக்கள் சேரும்
ஆரோக்கியம்
பெயர், புகழ்
திருமண யோகம்